![]() | 2019 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | முதல் பாகம் |
ஜனுவரி 01, 2019 முதல் ஏப்ரல் 29, 2019 வரை கடுமையான சோதனை காலம் (30 / 100)
சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியை பார்வை இடுகிறார். இதனால் உங்கள் உடல் நலம் பெரிதும் பாதிக்கக் கூடும். வயிற்று வலி, மூட்டு வலி, கழுத்து வலி, முதுகு வலி மற்றும் பித்தப் பையில் கல் போன்ற பிரச்சனைகளால் நீங்கள் அவதிப் படக் கூஉட்ம். உங்களது ஆரோக்கிய பிரச்சனைகளை சரியாக கண்டறிந்து வைத்தியம் பார்ப்பது சற்று கடினமாகவே இருக்கும். இது குறிப்பாக சாதகமற்ற ராகு மற்றும் கேது பெயர்ச்சியால் ஏற்படுவது. இத்தகைய சூழல் குறிப்பாக உங்களுக்கு தேவையற்ற பயம் மற்றும் பதற்றத்தை உருவாக்கக் கூடும். உங்கள் வாழ்க்கை துணைவர் மற்றும் அவரது வீட்டார்களுடன் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படக் கூடும். இந்த கடுமையான காலகட்டத்தை கடக்க நீங்கள் அதிக பொறுமையோடு இருக்க வேண்டும். காதலர்கள் குடும்பத்தில் சண்டைகள் ஏற்படுவதோடு பல சவால்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படக் கூடும்.
உங்கள் பிறந்த சாதா பலன் உங்களுக்கு சாதகமாக இல்லை என்றால், மார்ச் ஏப்ரல் மாத தொடக்கத்தில் நீங்கள் உங்கள் வேலையை இழக்கும் சூழல் ஏற்படலாம். உங்கள் வேலை சுமை மற்றும் பதற்றம் உச்சத்தை தொடலாம். நீங்கள் உங்கள் முதலாளி மற்றும் மேலாளரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட நேரிடலாம். மேலும் அவமானப் படும் சூழல் ஏற்படுவதால் நீங்கள் உங்கள் வெளியாயி ராஜினாமா செய்து விட எண்ணுவீர்கள். எனினும் அதை நீங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இந்த காலகட்டத்தில் நீங்கள் வேலையை இழப்பது மேலும் உங்கள் வாழ்க்கையை மோசமாக்கக் கூடும். தொழிலதிபர்கள் எதிர் பாராத பின்னடைவுகளை சந்திக்க நேரிடலாம். உங்களது நீண்ட கால வாடிக்கையாளர்கள், ப்ரோஜெக்ட்டுகளை நீங்கள் உங்கள் போட்டியாளரிடம் இழக்க நேரிடலாம். உங்கள் சாதக பலன் பலவீனமாக இருந்தால் உங்கள் வங்கி கணக்கு திவால் ஆகும் சூழலும் ஏற்படலாம்.
உங்கள் செலவுகள் அதிகரிக்கக் கூடும். உங்கள் சேமிப்புகள் விரைவாக கரையும். உங்களது தினசரி தேவைகளுக்கு நீங்கள் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். நீங்கள் முதலீடுகள் ஏதாவது செய்திருந்தால் அது பெரிய நட்டத்தை உங்களுக்கு ஏற்படுத்தக் கூடும். பங்கு சந்தையை விட்டு முற்றிலுமாக விலகி இருப்பது நல்லது. உங்கள் நேரம் நன்றாக இல்லாத இந்த சூழலில் நீங்கள் உங்கள் பங்குகளை விற்க எண்ணினால் விலை அதிகரிக்கும். வாங்க எண்ணினால் அதன் விலை குறையும். எந்த சூழலிலும் உங்களால் கிரகங்களை வெற்றி பெற முடியாது.
Prev Topic
Next Topic