![]() | 2019 புத்தாண்டு உடல் நலம் / ஆரோக்கியம் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | உடல் நலம் / ஆரோக்கியம் |
உடல் நலம் / ஆரோக்கியம்
இந்த வருடம் உங்கள் உடல் நலம் பாதிக்கப் படக் கூடும். ராகு மார்ச் 2019 வரையில்தான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். கேது மற்றும் சனி பகவான் இணைந்து மார்ச் 2019 முதல் சஞ்சரிப்பதால் உங்கள் உடல் நல பிரச்சனைகளை அதிகரிக்கக் கூடும். மேலும் மருத்துவ செலவுகளை அதிகரிக்கக் கூடும். உங்கள் குடும்பத்தினர்களின் உடல் நலம் பாதிக்கக் கூடும். குறிப்பாக உங்கள் பெற்றோர்களின் உடல் நலத்தின் மீது அதிக கவனம் தேவை. உங்களுக்கு உடம்பு வலி, வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படக் கூடும். உங்கள் பிறந்த சாதகம் பலவீனமாக இருந்தால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
இந்த காலகட்டத்தில் நீங்கள் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். உங்களை சுற்றி தவறான நண்பர்கள் வட்டம் சூழக் கூடும். அவர்கள் உங்களை தவறாக வழிநடத்தக் கூடும். உங்கள் பிறந்த சாதகம் பலவீனமாக இருந்தால் நீங்கள் தீய பழக்கங்களுக்கு அடிமையாகக் கூடும். இந்த காலகட்டத்தில் ஒரு நல்ல ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று அதன்படி நடந்து கொள்வது நல்லது. நீங்கள் உங்கள் குடும்பத்தினரை விட்டு வெளி நாட்டில் வசிப்பவராக இருந்தால் அதிகம் தனிமையை உணருவீர்கள். இந்த மோசமான காலகட்டத்தை கடக்க நீங்கள் அதிக பொறுமையாக இருக்க வேண்டும்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic