2019 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி)

காதல்


முக்கிய கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இல்லை. இதனால் நீங்கள் உறவுகளில் அதிக சவால்களை சந்திக்க நேரிடலாம். நீங்கள் விரும்புபவருடன் உங்களுக்கு கருத்து வேறுபாடு மற்றும் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு கிடைக்கும் புது நண்பரால் உங்கள் இருவருக்கும் இடையில் பிரச்சனைகள் ஏற்படக் கூடும். இந்த காதல் உறவு உங்களுக்கு ஏற்றதாக இருக்காது என்று நீங்கள் என்ன நேரிடலாம். நீங்கள் இந்த கடுமையான காலகட்டத்தை கடக்க வேண்டும் என்றால் சற்று பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் தற்காலிகமாக பிரிய நேரிடலாம்.
நீங்கள் காதலில் விழுந்திருந்தால் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். மேலும் உங்கள் காதலை வெளிபடுத்த அல்லது கூற இது தக்க நேரம் இல்லை. உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் முன் நீங்கள் அவமானப் படும் சூழல் ஏற்படலாம். உங்கள் மனம் தேவையற்ற எண்ணங்களால் நிறைந்திருக்கும். நீங்கள் தவறான நபரை நோக்கி ஈர்க்கப் படலாம். திருமணம் ஆனவர்கள் அனுயுனியம் குறைந்து காணப் படுவார்கள். நீங்கள் குழந்தை பேருக்கு திட்டமிட்டிருந்தால் உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து அதன் பின் எந்த முயர்ச்சியும் எடுப்பது நல்லது. IVF மற்றும் IUI போன்ற மருத்துவ சிகிச்சை நீங்கள் எதிர் பார்த்த பலனை தராமல் உங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic