![]() | 2019 புத்தாண்டு திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் |
திரைப்படம், கலை, அரசியல்
ஊடகத் துறையில் இருப்பவர்கள் மற்றும் அரசியலில் இருப்பவர்கள் அர்தஷ்டம சனியால் இந்த வருடம் பாதிக்கப் படுவார்கள். உங்கள் வளர்ச்சியிலும் வெற்றியிலும் அதிக தடை ஏற்படும். நீங்கள் கையெழுத்து போட்ட ஒப்பந்த்தங்களினால் சட்ட பிரச்சனைகள் வரக் கூடும். உங்கள் தயாரிப்பாளர், இயக்குனர், உடன் நடிக்கும் நடிகர்கள், மற்றும் பிற ஊழியர்களிடம் பிரச்சனைகள் ஏற்படக் கூடும். எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்கும் முன் உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து அதன் படி செய்வது நல்லது.
நீங்கள் கவனமாக இல்லை என்றால், சில தவறான முதலீடுகளால் உங்கள் பணத்தை இழக்க நேரிடலாம். உங்கள் வளர்ச்சியை தடுக்கும் வகையில் பல சதி மற்றும் மறைமுக எதிரிகளின் தாக்குதல் இருக்கக் கூடும் . சில தருணங்களில் நீங்கள் உங்கள் செல்வாக்கையும் இழக்க நேரிடலாம். வருமான வரி பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் நீங்கள் அனைத்து கணக்குகளையும் சரிவர வைத்துக் கொள்வது அவசியம். உங்கள் நிலம் குறித்தோ அல்லது முதலீடுகள் குறித்தோ பிரச்சனைகள் ஏற்படக் கூடும்.
Prev Topic
Next Topic