2019 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி)

கண்ணோட்டம்


இந்த 2019 புது வருடம் உங்களுக்கு சற்று சோதனைகளோடும், ஏமாற்றங்களோடும் தொடங்கும். சனி பகவான் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில், குரு 3ஆம் வீட்டில் மற்றும் கேது 5ஆம் வெட்டில் சஞ்சரிப்பது இந்த வருடத்தின் தொடக்கத்தில் கசப்பான அனுபவங்களை உங்களுக்குத் தரக் கூடும். மார்ச் 2019ல் ஏற்படவிருக்கும் ராகு பெயர்ச்சி, அதாவது ராகு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் இருந்து 1௦ஆம் வீட்டிற்கு இடம் மாறுவதும் சிறப்பாக இல்லை. அர்தாஷ்ட்டம சனியின் தாக்கம் இந்த வருடம் உங்களுக்கு அதிகமாக இருக்கக் கூடும்.
உங்கள் உடல் நலம் பெரிதும் பாதிக்கக் கூடும். மன அழுத்தம் மற்றும் பதற்றம் அதிகரிக்கக் கூடும். அது உங்கள் அலுவலகத்தில் நீங்கள் ஆர்வமற்று வேலை பார்க்க வேண்டிய சூழலை ஏற்படுத்தலாம். விசயங்கள் உங்களுக்கு எதிராக மாறக் கூடும். மார்ச் 2019 அல்லது செப்டம்பர் 2019 காலகட்டத்தில் உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் உங்கள் வேலையை இழக்கும் சூழலும் ஏற்படலாம் . உங்கள் சொந்த வாழ்க்கைக்கு நீங்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நீங்கள் கவனமாக இல்லை என்றால் சட்ட பிரச்சனைகளை எதிர் கொள்ள நேரிடலாம்.


மொத்தத்தில் இந்த 2019ஆம் வருடம் உங்களுக்கு ஒரு சவால் மிகுந்ததாகவே இருக்கும். ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து பின் எந்த ஒரு முக்கிய முடிவுகளும் எடுப்பது நல்லது. முதலீடுகள் செய்வதில் ரிஸ்க் மற்றும் ஊக வர்த்தகம் செய்வதை தவிர்ப்பது நல்லது. அது பெரிய அளவில் உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தக் கூடும்.


Prev Topic

Next Topic