![]() | 2020 புத்தாண்டு தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் |
தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்
குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் தொழில் வளர்ச்சியில் அக்டோபர் 2020 வரை போட்டியாளர்களால் சில தடைகளை உண்டாக்கி இருந்திருக்கக் கூடும், குரு மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்தும் உங்கள் மறைமுக எதிரிகள் மற்றும் போட்டியாளர்களின் பலத்தை குறைப்பார்கள். உங்கள் போட்டியாளர்களை எதிர்த்து நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள்.
உங்களுக்கு பல ப்ரோஜெக்ட்டுகள் கிடைப்பதால், சிறப்பான வளர்ச்சியை உங்கள் தொழிலில் காண்பீர்கள். பண வரத்து அதிகமாக இருக்கும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் ஒரு தொடக்க நிலையில் இருக்கும் தொழிலை எடுத்து நடத்த வாய்ப்பு கிடைக்கும். இதனால் நீங்கள் செல்வந்தராகவும் வாய்ப்பு உண்டாகும். உங்கள் தொழிலில் ஏற்படும் வளர்ச்சியை கண்டு நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.
ஜனவரி 2020 முதல் செப்டம்பர் 2020 வரையிலான காலகட்டத்தில் உங்கள் தொழிலில் பெரும் அளவு முன்னேற்றம் ஏற்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நீங்கள் உங்கள் லாபத்தை பணமாக்கி, உங்கள் வாழ்க்கையில் செட்டிலாக முயற்சி செய்ய வேண்டும். ஏழரை சனியின் தாக்கம் 2021 முதல் அதிகமாக உணரப்படும், மேலும் உங்கள் குடும்பத்தினர்களின் பெயரை தொழில் சேர்த்துக் கொள்வதும் நல்ல யோசனையாக இருக்கும். நீண்ட கால அடிப்படையில் நீங்கள் தொழிலை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதகத்தின் பலனை பார்க்க வேண்டும்.
Prev Topic
Next Topic