![]() | 2020 புத்தாண்டு கல்வி ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | கல்வி |
கல்வி
மாணவர்கள் கடந்த 2019ஆம் ஆண்டு கலவையான பலன்களை பெற்றிருப்பார்கள், தற்போது உங்களுக்கு விடயங்கள் சிறப்பாக இருக்கும். நீங்கள் உங்கள் மேல் படிப்பில், குறிப்பாக முதுநிலை பட்டம் அல்லது PhD பட்டத்தில் சிறப்பான முன்னேற்றத்தை பெறுவீர்கள். உங்களுக்கு பெரிய கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் இந்த ஆண்டு எளிதாக சேர்க்கை கிடைத்து விடும். உங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் உங்கள் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள்.
உங்கள் நண்பர்களுடன் நெருங்கிய நட்போடு இருப்பதால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். முதுநிலை பட்டம் மற்றும் PhD படிக்கும் மாணவர்கள் இந்த ஆண்டின் இறுதியில் தங்களது ஆய்வறிக்கை ஒப்புதல் பெற்று, பட்ட படிப்பை முடிப்பார்கள். நீங்கள் படிப்பிலும், விளையாட்டிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். விருதுகள் வாங்கும் வாய்ப்புகளும் உங்களுக்கு அதிகமாக உள்ளது.
Prev Topic
Next Topic