2020 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்


முக்கிய கிரகங்களான சனி பகவான், கேது மற்றும் குரு இணைந்து உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சக்திவாய்ந்த நிலையில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவார்கள். உங்கள் குடும்பத்தினர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இந்த ஆண்டு நல்ல நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடுவீர்கள். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது நல்ல நேரம். சுப காரியங்கள் நிகழ்த்துவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரைப் பெரும்.
உங்கள் குழந்தைகள் உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வருவார்கள். உங்கள் குடும்ப சூழல் உங்கள் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கும். உங்களுக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏழரை சனி காலம் தொடங்கினாலும், அதன் தாக்கத்தை தற்போது பெற மாட்டீர்கள். இந்த ஆண்டு எந்த பிரச்சனைகளும் உங்களுக்கு இருக்காது. ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரையிலான காலகட்டத்தில் அதிக செலவுகள் ஏற்படக் கூடும். குறிப்பாக சுப காரியங்கள் நிகழ்த்தும் போது அதிக செலவுகள் ஏற்படக் கூடும். உங்கள் குடும்பத்தினர்களுடன் உங்கள் நீங்கள் நீண்ட காலமாக ஆசைப்பட்ட சுற்றுலா செல்ல இது நல்ல நேரம்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic