![]() | 2020 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
குரு, சனி பகவான் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு முதல் சில மாதங்களுக்கு பண மழையை பொழிவார்கள். பண வரத்து பல வழிகளில் இருந்தும் வரும். மேலும் எதிர்பாராத வழிகளில் இருந்தும் உங்களுக்கு பண வரத்து ஏற்படும். நீங்கள் உங்கள் கடன் பிரச்சனைகளில் இருந்து வெளி வந்து விடுவீர்கள். உங்கள் வங்கி கணக்கில் போதிய பண இருப்பு இருக்கும்.
உங்கள் வங்கி கடன் குறைந்த வட்டி விகிதத்திருக்கு எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் ஒப்புதல் பெரும். எந்த தேவையற்ற செலவுகளும் இருக்காது. உங்கள் குடும்பத்தினர்களுக்கு தங்க நகைகள் வாங்குவதில் மகிழ்ச்சி அடைவீர்கள். நல்ல மன நிம்மதியோடு இருப்பீர்கள். கடன் இல்லாததாலும், நல்ல சேமிப்பு உண்டாவதாலும் உங்களுக்கு நல்ல தூக்கம் வரும். உங்கள் கனவு இல்லத்திருக்கு குடி பெயருவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மேலும் ஜனவரி, பெப்ரவரி, மார்ச், செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் உங்கள் அதிர்ஷ்டத்தை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். புது வாகனம் வாங்கி உங்கள் சௌகரியத்தை அதிகரித்துக் கொள்ள இது நல்ல நேரம்.
குரு உங்கள ராசியின் 12ஆம் வீடிருக்கு அதி சரமாய் பெயருவதால், ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரை அதிக செலவுகள் உண்டாகும். எனினும், இந்த செலவுகள் சுப காரியங்களால் அல்லது பயணம் அல்லது ஆடம்பர பொருட்கள் வாங்குவது அல்லது சுற்றுலா செல்வது போன்ற காரணங்களால் ஏற்படக் கூடும். மொத்தத்தில் அடுத்த ஒரு ஆண்டுக்கு உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
Prev Topic
Next Topic