![]() | 2020 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | காதல் |
காதல்
காதலர்களுக்கு இது ஒரு சிறப்பான நேரமாக இருக்கும். காதலர்கள் ஜனவரி, பெப்ரவரி, மார்ச், செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் காதல் விடயங்களில் பொற்காலத்தை காண்பார்கள். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களுடன் வெளியே செல்வதில் மகிழ்ச்சி அடைவீர்கள். நீங்கள் காதலில் விழுவீர்கள். உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் ஒப்புதல் தருவார்கள்.
நீங்கள் நடுத்தர வயதினராக இருந்தாலும், உங்களுக்கு ஏற்ற நபரை கண்டறிந்து, திருமணம் செய்து கொண்டு உங்கள் வாழ்க்கையை தொடங்குவீர்கள். திருமணம் ஆனவர்கள் நல்ல அன்யுனியதோடு இருப்பார்கள். நீண்ட காலமாக குழந்தை பேருக்காக திட்டமிட்டுக் கொண்டிருக்கும் தம்பதியினர், குருவின் பலத்தால், அந்த பாக்கியத்தை பெறுவார்கள். இயற்கையாகவோ, அல்லது மருத்துவ சிகிச்சை மூலமாகவோ உங்களுக்கு குழந்தை பேரு உண்டாகும் பாக்கியம் கிடைக்கும்.
நவம்பர் 2020க்குள் உங்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகி விட முயற்சி செய்யுங்கள். அதன் பின்னர் அடுத்த சில ஆண்டுகளுக்கு 2021 முதல் நீங்கள் சோதனை காலத்தில் இருப்பீர்கள். இது குறிப்பாக ஏழரை சனியின் தாக்கம் அதிகரிப்பதால் ஏற்படும்.
Prev Topic
Next Topic