![]() | 2020 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சனி பகவான் உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு சஞ்சரித்தார். குரு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டிற்கு நவம்பர் 2019 முதல் சஞ்சரிகின்றார் . இதனால் உங்களுக்கு அதிக அதிர்ஷ்டம் உண்டாகி இருந்திருக்கும். இந்த 2020ஆம் ஆண்டு உங்களுக்கு அமைதியாக தொடங்கும். முக்கிய கிரகங்கள் இணைந்து உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து. இந்த் ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் அதிர்ஷ்டத்தை பல மடங்கு அதிகரிப்பார்கள்.
உங்களுக்கு ஜனவரி 23, 2020 அன்று ஏழரை சனி காலம் தொடங்கினாலும், அதன் பாதிப்புகள் இந்த ஆண்டு இருக்காது. நீங்கள் தொடர்ந்து இந்த ஆண்டும் நல்ல அதிர்ஷ்டத்தை பெறுவீர்கள். உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும் .புது வீடு வாங்கி குடி பெயருவீர்கள். சுப காரியங்கள் நிகழ்த்துவதில் மகிழ்ச்சி அடைவீர்கள்.
உங்களது நீண்ட கால ஆசைகள் மற்றும் வாழ்நாள் கனவுகள் நிறைவேறும். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரையும், புகழையும் பெரும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் ஒரு முக்கியத்துவர் அந்தஸ்த்தை பெறுவீர்கள். மொத்தத்தில் இந்த 2020ஆம் ஆண்டு, எழரை சனி காலம் நடந்தாலும், உங்களுக்கு ஒரு பொற்காலமாக அமையும்.
Prev Topic
Next Topic