2020 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி)

மார்ச் 29, 2020 முதல் ஜூலை 01, 2020 வரை அதிக செலவுகள் (50 / 100)


குரு மற்றும் சனி பகவான் உங்கள் ராசியின் 12ஆம் வீடான விரிய ஸ்தானத்தில் இந்த பாகத்தில் சஞ்சரிக்கின்றார்கள். இதனால் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு செலவுகள் அதிகமாக இருக்கக் கூடும். உங்களுக்கு உற்சாகத்தால் சரியான தூக்கம் இல்லாமல் இருக்கும். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களுடன் நேரம் செலவிடுவதில் மும்மரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள். உங்கள் குடும்பத்தினர்களுடன் சில வாக்குவாதங்கள் ஏற்படக் கூடும். இது சரியான தொடர்பு இல்லாத காரணத்தால் ஏற்படக் கூடும்.
உங்கள் வேலை சுமை மற்றும் அழுத்தம் அதிகமாக இருக்கும். உங்கள் சொந்த காரணங்களால், அதிக நாட்கள் நீங்கள் அலுவலகத்தில் இருந்து விடுப்பு எடுப்பீர்கள். இதனால் உங்கள் ப்ரோஜெக்ட்டை தக்க நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம். எனினும், உங்கள் சம்பள உயர்வும், போனசும் பாதிக்காது. இந்த பாகத்தில் புது வேலை வாய்ப்பிற்கு முயற்சி செய்வதை தவிர்ப்பது நல்லது. தொழிலதிபர்கள் நிதி குறித்த விடயங்களில் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். தற்போது ஏழரை சனி காலம் தொடங்கி உள்ளதால், அடுத்த ஏழரை ஆண்டுகள் தொழிலதிபர்கள் தங்களது பிறந்த சாதக பலனை பார்த்தே எந்த ஒரு முடிவும் எடுக்க வேண்டும்.


உங்கள் நிதி நிலை பாதிக்கக் கூடும், உங்கள் செலவுகள் அதிகரிக்கும் தேவைகளால், விண்ணைத் தொடும் அளவிற்கு உயரும். உங்கள் சேமிப்புகள் விரைவாக கரையும். நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டை சார்ந்தே அதிகரிக்கும் செலவுகளை சமாளிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து முற்றிலும் விலகி இருப்பது நல்லது, ரியல் எஸ்டேட் பரிவர்தனைகள் மற்றும் சொத்துக்களில் முதலீடு செய்வது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.


Prev Topic

Next Topic