![]() | 2020 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | மூன்றாம் பாகம் |
ஜூலை 01, 2020 முதல் நவம்பர் 20, 2020 வரை நல்ல நேரம் (75 / 100)
குரு பகவான் உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு மீண்டும் பெயருகிறார். இதனால் உங்களுக்கு நல்ல நிவாரணம் உண்டாகும். நீங்கள் உங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளில் இருந்து வெளி வருவீர்கள். இந்த காலகட்டத்தில் விடயங்கள் நல்ல முன்னேற்றம் பெரும். குரு செப்டம்பர் 13, 2020 அன்று வக்கிர நிவர்த்தி அடைகிறார். இதனால் உங்கள் நிதி நிலையில் நல்ல அதிர்ஷ்ட்டம் உண்டாகும்.
உங்கள் உடல் நலம் சிறப்பாக இருக்கும். எந்த மருத்துவ செலவுகளும் இருக்காது. உங்கள் மனைவி/கணவன் மற்றும் குடும்பத்தினர்கள் உக்னால் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் முயற்சிகளுக்கு ஏற்ற நல்ல வெற்றியை பெறுவீர்கள். உங்களுக்கு தற்போது ஏழரை சனி காலம் நடந்தாலும், இந்த பாகத்தில் அதன் பாதிப்புகள் இருக்காது.
நல்ல உற்சாகத்தோடு இருப்பீர்கள். மக்கள் உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். நீங்கள் காதலில் விழுந்தால், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஒரு நல்ல வரனை பார்த்து திருமணம் முடிக்க இது சிறப்பான நேரம். திருமணம் ஆன தம்பதியினர் நல்ல அன்யுனியத்தோடு இருப்பார்கள். குழந்தை பேரு பெரும் பாக்கியமும் சிறப்பக உள்ளது. உங்கள் கனவு சுற்றுலா செல்ல திட்டமிட இது நல்ல நேரம். சுப காரியங்கள் நிகழ்த்துவதில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரையும், செல்வாக்கையும் பெரும்.
நீண்ட காலமாக நீங்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கு காத்திருந்தால், அது தற்போது உங்களுக்கு இந்த காலகட்டத்தில் கிடைக்கும். உங்களுக்கு கிடைக்கும் போனஸ், பங்குகள், மற்றும் நிதி சன்மானங்களால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புது வேலை வாய்ப்பு கிடைத்து, பெரிய நிறுவனத்தில் நீங்கள் வேலைக்கு சேர இது நல்ல நேரம். உங்கள் அலுவலக வேலைகளை எளிதாக சமாளிப்பீர்கள். தொழிலதிபர்கள் தங்கள் லாபத்தை பணமாக்கக் இது சிறந்த நேரம். உங்கள் சேமிப்பு கணக்கில் அதிக பணம் இருப்பதால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம். புது வாகனம் மற்றும் தங்க நகைகள் வாங்குவதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
Prev Topic
Next Topic