2020 புத்தாண்டு பயணம் மற்றும் குடியேற்றம் ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி)

பயணம் மற்றும் குடியேற்றம்


முக்கிய கிரகங்கள் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். உங்களுக்கு பயண சீட்டு முன் பதிவு, தங்கும் விடுதி, வாடகைக்கு கார் எடுப்பது போன்ற விடயங்களில் நல்ல சலுகைகள் கிடைக்கும். உங்கள் குடும்பத்தினர்களுடன் சுற்றுலா செலவதாலும், தொழில் குறித்த பயணம் செய்வதாலும், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மேலும் நீங்கள் எங்கு சென்றாலும், நல்ல தங்கும் வசதி கிடைக்கும். பயணத்தின் போது நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பீர்கள். புது வாகனம் வாங்க இது நல்ல நேரம்.
உங்களுக்கு கடந்த மாதங்களில் விசா குறித்த பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தால், அதில் இருந்து தற்போது எளிதாக வெளிவந்து விடுவீர்கள். நிலுவையில் இருக்கும் உங்கள் குடியேற்றம் குறித்த விண்ணப்பம் பெப்ரவரி அல்லது மார்ச் 2020 வாக்கில் ஒப்புதல் பெரும். நீங்கள் கனடா அல்லது ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு நிரந்தர குடியேற்றம் பெற விண்ணப்பித்திருந்தால், அது தற்போது இறுதி கட்ட ஒப்புதலைப் பெரும். வெளிநாடிருக்கு குடிபெயருவதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கோச்சார கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிபதால் விசா ஸ்டம்பிங் செய்ய தாய் நாடு செல்ல அக்டோபர் 2020 வரை சிறப்பான நேரமாக உள்ளது.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic