2020 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி)

வேலை / உத்தியோகம்


சனி பகவான் மற்றும் கேது இணைந்து உங்களுக்கு அலுவலகத்தில் நல்ல சூழலை பெற கடந்த 2019ஆம் ஆண்டு உதவி செய்திருப்பார்கள். எனினும், குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நவம்பர் 2019 வரை மேல் நிலை அரசியலை உண்டாக்கி இருந்திருப்பார். இந்த 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முக்கிய கிரகங்கள் உங்கள் லாப சாதனத்தில் சஞ்சரிக்கின்றனர்.
புது வேலை வாய்ப்புக்கு முயற்சி செய்ய இது நல்ல நேரம். உங்களுக்கு புது வேலை வாய்ப்பு நல்ல சம்பளத்தோடு கிடைக்கும். நல்ல முன்னேற்றம் இருக்கக் கூடிய ப்ரோஜெக்ட்டில் நீங்கள் வேலை பார்ப்பீர்கள். உங்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வோடு ஜனவரி அல்லது பெப்ரவரி 2020 வாக்கில் கிடைக்கும். உங்களுக்கு தொடர்ந்து வளர்ச்சி இருந்து கொண்டே இருக்கும். எந்த மறைமுக சதிகளும், மறைமுக எதிரிகளும் இருக்க மாட்டார்கள். அதனால் உங்கள் உத்தியோகம் சுமூகமாக செல்லும்.


வெளிநாட்டிற்கு இடமாற்றம் செய்ய இது நல்ல நேரம். உங்கள் அலுவலக வாழ்க்கையை நீங்கள் எளிதாக சமாளிப்பீர்கள். நீங்கள் அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தாள், மார்ச் 2020 வாக்கில் அல்லது செப்டம்பர் 2020 வாக்கில் உங்களுக்கு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நீங்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும், மேலும் உங்கள் நிறுவனத்தில் இருந்து குடியேற்ற பலன்களும் கிடைக்கும்.


Prev Topic

Next Topic