![]() | 2020 புத்தாண்டு தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் |
தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்
2019 உங்கள் வாழ்க்கையின் ஒரு மோசமான காலகட்டமாக இருந்திருக்கும். நோவேபேர் 2019 முதல் சில நேர்மறை மாற்றங்களை கண்டிருப்பீர்கள். தற்போது விடயங்கள் இந்த 2020ஆம் ஆண்டு உங்களுக்கு சாதகமாக திரும்பும். உங்களுக்கு இத்தனை நாட்களாக பிரச்சனை தந்தவர்களை கண்டறிந்து, அவர்களை விட்டு விலகி இருப்பீர்கள். முக்கிய கிரகங்கள் உங்கள் பாக்ய ஸ்தானத்திற்கு பெயருவதால், நீங்கள் சிறப்பாக செயல்படத் தொடங்குவீர்கள். சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிற்கு ஜனவரி 23, 2020 அன்று பெயர்ந்தாலும், அதனால் உங்கள் அதிர்ஷ்டத்தில் எந்த பாதிப்புகளும் இருக்காது.
உங்கள் தொழில் வளர்ச்சிக்காக, பல புதுமையான யோசனைகளை கொண்டு வருவீர்கள். உங்கள் போட்டியாளர்களை எதிர்த்து சிறப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்கு நீண்ட கால அடிப்படையில் பல புதிய ப்ரொஜெக்ட்கள் கிடைக்கும். பண வரத்து, பல வழிகளில் இருந்து வரும். வெளிநாடுகளில் இருந்தும் பண வரத்து உண்டாகும். தொழிலை விரிவு படுத்த நீங்கள் விண்ணப்பித்த வங்கி கடன் ஒப்புதல் பெரும். புது தொழிலை தொடங்க இது சரியான நேரம். சுய தொழில் புரிவோரோகள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், இன்சூரன்ஸ் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் தங்களுக்கு அதிகரிக்கும் புகழ், நற்பெயர் மற்றும் வருமானத்தால், மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic