2020 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறுவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

குடும்பம் மற்றும் உறுவுகள்


இந்த புத்தாண்டின் தொடக்கத்தில் நீங்கள் நல்ல நிவாரணம் பெரும் காலத்தில் இருப்பீர்கள். கடந்த ஆண்டு நவம்பர் 2019kku உங்களுக்கு ஏற்பட்ட வலி மிகுந்த சம்பவங்களில் இருந்து வெளி வருவீர்கள். உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்புமுனை உண்டாகும். சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு தேவையற்ற பயத்தை உண்டாக்கக் கூடும். எனினும், சனி பகவானின் தாக்கம், குரு மற்றும் ராகு நல்ல நிலையில் சஞ்சரிபதால், அதிகமாக இருக்காது.
குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் குடும்பத்தினர்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். குடும்பத்தில் எந்த அரசியலும் இருக்காது. ஒன்றன் பின் ஒன்றாக பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். நீங்கள் உத்தியோகம், பயணம் அல்லது வேறு சொந்த காரணங்களுக்காக உங்கள் குடும்பத்தினரை விட்டு பிரிந்து இருந்தால், தற்போது நல்ல மாற்றம் ஏற்பட்டு உங்கள் குடும்பத்தினர்களுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வீர்கள். உங்கள் குழந்தைகள் நல்ல செய்திகளை உங்களுக்கு கொண்டு வருவார்கள்.


திருமணம், புது வீடு புகு விழா, ஆண்டு விழா என்று என்று சுப காரியங்கள் நிகழ்த்த இது நல்ல நேரம். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரையும், புகழையும் பெரும். கடந்த மாதங்களில் உங்களை மதிக்காதவர்கள், தற்போது உங்களுடன் நல்ல உறவை மீண்டும் வளர்த்துக் கொள்ள விரும்புவார்கள். அதுவும், குறிப்பாக செப்டம்பர் 2020 முதல் இந்த மாற்றம் ஏற்படும்.



Prev Topic

Next Topic