![]() | 2020 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
கடந்த 2019ஆம் ஆண்டு உங்கள் நிதி நிலை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும். நீங்கள்அக்டோபர் 2019 வாக்கில் பீதி அடையும் நிலையில் இருந்திருப்பீர்கள். உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இந்த ஆண்டு உங்களுக்கு நிதி நிலை குறித்த விடயங்களுக்கு சிறப்பாக உள்ளது. உங்கள் கடனை நிதி மறு பரிசீலனை செய்து, உங்கள் கடனை குறைக்கவும், வட்டி விகிதத்தை குறைக்கவும், இது ஏற்ற நேரம். மேலும் நீங்கள் உங்களுக்கு கடன் கொடுத்தவர்களிடம் பேசி, சற்று வட்டித் தொகையை குறைத்துக் கொண்டு, உங்கள் கடனை செட்டில் செய்து விடவும் இது நல்ல நேரம். பண வரத்து உங்களுக்கு பல வழிகளில் இருந்து வரும். வெளிநாட்டில் இருக்கும் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு நல்ல உதவியாக இருப்பார்கள்.
புது வேலை வாய்ப்பு அல்லது பதவி உயர்வு காரணங்களால் உங்கள் வருமானம் அதிகரிக்கக் கூடும். எந்த தேவையற்ற செலவுகளும் இருக்காது. உங்கள் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை விரைவாக திருப்பி செலுத்தி விடுவீர்கள். உங்கள் நிதி பிரச்சனைகளில் இருந்து படிப்படியாக வெளி வந்து விடுவீர்கள். மேலும் உங்கள் செலவுகளை கட்டுப்படுத்தி, எடிர்காலதிர்க்காக பணத்தை சேமிக்கத் தொடங்குவீர்கள். தங்க கட்டி அல்லது தங்க நகைகள் வாங்குவதில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
உங்கள் பழைய நிறுவனத்தில் இருந்து நிலுவையில் இருக்கும் சம்பளம் அல்லது இன்சூரன்ஸ் செட்டில்மென்ட் போன்றவை உங்களுக்கு வருவதால், ஒரு பெரியத் தொகை உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது/ மொத்தத்தில், உங்கள் நிதி நிலையில் அக்டோபர் 2020 வரை நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். நவம்பர் மற்றும் டிசம்பர் 2020 முதல் அதிக செலவுகள் ஏற்படக் கூடும்.
Prev Topic
Next Topic