2020 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

ஜனவரி 01, 2020 முதல் மார்ச் 29, 2020 வரை நல்ல மாற்றங்கள் (70 / 100)


கடந்த ஆண்டு அக்டோபர் 2019 வரை நீங்கள் பல இன்னல்களை சந்தித்திருந்திருப்பீர்கள். எனினும், நவம்பர் 2019 முகல் குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டிற்கு பெயர்ந்த பின் பல நல்ல மாற்றங்களை உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டிருந்திருக்கும். கடந்த ஓரிரு மாதங்கள் உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை நீங்கள் கவனித்து இருந்திருப்பீர்கள். தற்போது இந்த பாகத்தில் நீங்கள் நேர்மறை நிகழ்வுகள் பலவற்றை காண்பீர்கள்.
உடல் உபாதைகளில் இருந்து வெளி வருவீர்கள். குறைந்த முயற்சிகள் எடுத்தாலும், நீங்கள் எதிர்பார்த்த பலனைப் பெறலாம். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்வீர்கள். உங்கள் மனைவி/கணவன் மற்றும் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது நல்ல நேரம். குழந்தை பேருக்கு திட்டமிட இது நல்ல நேரம். காதலர்கள் தங்களுக்கு கடந்த சில நாட்களாக தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளில் இருந்து வெளி வேற மேலும் சில மாதங்கள் ஆகலாம்.


அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக ஏற்பட்ட அரசியல் மற்றும் சதிகளால் நீங்கள் அதிகம் இன்னல்களை சந்தித்திருந்திருப்பீர்கள். தற்போது உங்கள் உத்தியோகத்தில் சிறப்பான வளர்ச்சி ஏற்படும். தற்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் உத்தியோகத்தில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால், நீங்கள் புது வேலை வாய்ப்பிற்கு முயற்சி செய்யலாம். உங்களுக்கு நல்ல சம்பளத்தோடும், பதவியோடும் சிறப்பான வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் இருந்து கிடைக்கும் லாபத்தால் நல்ல பண வரத்தைப் பெறுவார்கள். உங்கள் தொழில் பங்குதாரருடன் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வுகளை காண்பீர்கள். மேலும் வருமான வரி பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வைப் பெறுவீர்கள். உங்களது புதுமையான யோசனைகள் உங்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியைப் பெற்றுக் கொடுக்கும். தொலை தூர பயணம் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. நீங்கள் விசா ஸ்டம்பிங் செய்ய அல்லது H1B விசா விண்ணப்பிக்க இது நல்ல நேரம்.
இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் பணம் யாரிடமாவது தேக்கம் அடைந்திருந்தால், அது இந்த காலகட்டத்தில் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் வெகு நாட்களாக காத்திருந்த வங்கிக் கடன் தற்போது ஒப்புதல் பெரும். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். சம்பளம் மற்றும் முதலீடுகளால் உங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் வளர்ச்சி உண்டாகும். நீங்கள் உங்கள் கடனை விரைவாக அடைப்பீர்கள். சேமிப்பு கணக்கில் இருக்கும் உங்கள் பணம் வளரும். ரியல் எஸ்டேட் முதலீடுகள் செய்ய, அல்லது புது வீடு வாங்க இது நல்ல நேரம். பங்கு சந்தை வர்த்தகம் உங்களுக்கு லாபத்தை தரும். நீங்கள் ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் மற்றும் நாள் வர்த்தகம் செய்பவராக இருந்தால், அதற்கு உங்கள் பிறந்த சாதகத்தின் பலன் இருக்க வேண்டும்.




Prev Topic

Next Topic