![]() | 2020 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | நான்காம் பாகம் |
நவம்பர் 20, 2020 முதல் டிசம்பர் 31, 2020 வரை, உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் பின்னடைவு (45 / 100)
இந்த காலகட்டத்தில் நீங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிலும், செவ்வாய், 12ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு தேவையற்ற பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தக் கூடும். உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கக் கூடும். உங்கள் குடும்பத்தினரின் உடல் நலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும். அதிகரிக்கும் மருத்துவ செலவுகள் மற்றும் பயண செலவுகள் உங்கள் நிதி நிலையை பாதிக்கக் கூடும்.
உங்கள் அலுவலகத்தில் அரசியல் அதிகரிக்கும். உங்கள் அலுவலகத்தில் ஏற்படும் மாற்றங்களாலும், மேலும் நீங்கள் வேறு குழுவினருடன் சேர்ந்து வேலை பார்க்க வேண்டிய சூழல் உண்டாவதாலும், உங்களுக்கு வேலையில் ஆர்வம் இல்லாமல் இருப்பீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் எந்த பதவி உயர்வையும் எதிர் பார்க்க முடியாது. மாறாக, தற்போது இருக்கும் நிலையிலேயே உங்கள் உத்தியோகத்தை பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். உங்கள் வேலை சுமையை சமாளிக்க முடியாமல் போகலாம். தொழிலதிபர்கள், போட்டியாளர்கள் மற்றும் பங்குதாரர்களால் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
முடிந்த வரை பயணத்தை தவிர்ப்பது நல்லது. விசா குறித்த விடயங்களில் அதிக தாமதங்கள் ஏற்படக் கூடும். அதிகரிக்கும் செலவுகள் உங்கள் சேமிப்பை பாதிக்கக் கூடும். பங்கு சந்தை வர்த்தகத்தில் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் இருப்பது நல்லது. உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல், ரியல் எஸ்டேட் சொத்துக்கள் மீது முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது.
Prev Topic
Next Topic