![]() | 2020 புத்தாண்டு உடல் நலம் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | உடல் நலம் |
உடல் நலம்
நவம்பர் 2019 முதல் உங்களுக்கு சற்று ஆதரவான நிகழ்வுகள் நடக்கத் தொடங்கி இருக்கும். குரு உங்கள் ஜென்ம ராசியை பார்வை இடுவதால், உங்கள் உடல் நல பிரச்சனைகள் குறையத் தொடங்கும். குரு ராகுவை பார்வை இடுவதால், உங்களுக்கு சரியான வைத்தியம் கிடைத்து, உங்கள் உடல் நல பிரச்சனைகள் குணமாகும். உங்களால், மூலக் காரணம் என்னவென்று கண்டறிய முடியும். எனினும், அது குறிப்பாக உளவியல் ரீதியாக உண்டான பிரச்சனைகளாக இருக்கும்.உங்கள் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தில் இருந்து வெளி வருவீர்கள்.
உங்கள் குடும்பத்தினர்களின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்தவ சேலைகள் குறைவதால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அதிக உடற் பயிற்சி செய்து உங்கள் உடல் எடையை சீராக வைத்திருக்க முயற்சி செய்வீர்கள். தினமும் காலையின், ஆதித்ய ஹ்ருதயம் மற்றும் ஹனுமான் சாலிச கேட்பதால் அதிகம் பலம் பெறுவீர்கள். முக்கிய கோவில்களுக்கு சென்று கடவுள் தரிசனம் பெறவும், உங்கள் ஆன்மீக குருவை சந்திக்கவும் இது நல்ல ஆண்டு. மேலும்
குறிப்பாக ஏப்ரல் 2020 முதல் மே 2020 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு சில பின்னடைவுகள் ஏற்படக் கூடும் எனினும் உங்களால் ராகுவின் பலத்தால் அதனை எளிதாக சமாளிக்க முடியும். நவம்பர் 20, 2020 முதல் முக்கிய கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிக்காததால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
Prev Topic
Next Topic