![]() | 2020 புத்தாண்டு வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | வழக்கு |
வழக்கு
கடந்த 2019ஆம் ஆண்டு அதிக சட்ட பிரச்சனைகள் இருந்திருக்கும். உங்கள் மீது தவறு இல்லையென்றாலும், நீங்கள் பாதிக்கப்பட்டிருப்பீர்கள். உங்கள் மீது குற்றம் சுமத்தப் பட்டிருக்கும். மேலும் ஆகஸ்ட் / செப்டம்பர் 2019 மாதங்களில் உங்கள் நற்பெயரும் பாதிக்கப்பட்டிருக்கும். நீங்கள் விவாகரத்து, குழந்தை காவல், ஜீவனாம்சம் போன்ற வழக்கு போட்டிருந்தால், விடயங்கள் உங்களுக்கு எதிராக சென்றிருக்கும். எனினும், நவம்பர் 2019 முதல் சில முன்னேற்றம் உங்கள் வழக்கில் ஏற்பட்டிருக்கும்.
இந்த 2020ஆம் ஆண்டு வழக்கு குறித்த விடயங்களில் நல்ல பலனை காண்பீர்கள். உங்கள் வழக்கறிஞரை மாற்றி, உயர் நீதிமன்றத்திற்கு உங்கள் வழக்கை எடுத்து செல்ல இது நல்ல நேரம். சரியான சாட்சிகளை தந்து, உங்களுக்கு நீதி கிடைக்க நீங்கள் முயற்சி செய்யலாம். உங்களை சுற்றி இருப்பவர்கள், கடந்த ஆண்டின் இறுதியில், உங்கள் மீது எந்த தவறும் இல்லை என்பதை உணர்ந்திருப்பார்கள். சொத்து குறித்த பிரச்சனைகள் உங்களுக்கு சாதகமான முடிவடையும். மேலும் கிரிமினல் வழக்குகளில் இருந்து செப்டம்பர் 2020 வாக்கில் வெளி வந்து விடுவீர்கள்.
Prev Topic
Next Topic