2020 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

கண்ணோட்டம்


2020 புத்தாண்டு வாழ்த்துக்கள்!
முக்கிய கிரகங்கள் உங்கள் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், இந்த ஆண்டு உங்களுக்கு பல்ல நல்ல பலன்களை கொண்டு வரும். அக்டோபர் 2019 வரை அதிகம் இன்னல்களை சந்தித்திருந்திருப்பீர்கள். ஆனால், இந்த ஆண்டு விடயங்கள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். ராகு மற்றும் கேது செப்டம்பர் 2020 வரை நல்ல நிலையில் சஞ்சரிகின்றனர். ஜனவரி 23, 2020 அன்று ஏற்படும் சனி பெயர்ச்சி உங்களுக்கு சில பின்னடைவுகளை ஏற்படுத்தக் கூடும். எனினும், இந்த 2020ஆம் ஆண்டு உங்களுக்கு நேர்மறை சக்திகள் அதிகமாகவே இருக்கும்.


இந்த 2020ஆம் ஆண்டு நீங்கள் விரைவாக பல நல்ல மாற்றங்களை உங்கள் வாழ்க்கையின் பல விடயங்களிலும் காண்பீர்கள். குறிப்பாக உடல் நலம், குடும்பம், உத்தியோகம், நிதி நிலை, மற்றும் முதலீடுகள் போன்ற விடயங்களில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் இந்த ஆண்டு நல்ல நிலையில் செட்டில் ஆகி விட நல்ல மாற்றங்கள் ஏற்படும். உங்கள் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவ செலவுகள் குறையும். உங்கள் குடும்பத்தினர்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவு சிறப்பாக இருக்கும்.
சுப காரியங்கள் நிகழ்த்துவதால், மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களது வாழ்நாள் கனவுகளும் மற்றும் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். உங்கள் குடும்பத்தினர்கள் சமுதாயத்தில் நல்ல பெயரையும், செல்வாக்கையும் பெறுவார்கள். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் ஒரு முக்கியத்துவர் அந்தஸ்த்தை அடைவீர்கள். எனினும், நவம்பர் 20, 2020 அன்று குரு பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிற்கு பெயருவதால், நீங்கள் நவம்பர் மாதம் முதல் சற்று கவனமாக இருக்க வேண்டும். மொத்தத்தில் இந்த ஆண்டு உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், வெற்றியையும் கொண்டு வரும் ஆண்டாக இருக்கும்.




Prev Topic

Next Topic