![]() | 2020 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | இரண்டாம் பாகம் |
மார்ச் 29, 2020 முதல் ஜூலை 01, 2020 வரை, உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் பின்னடைவுகள் (50 / 100)
குரு, சனி பகவான் மற்றும் செவ்வாய் இணைந்து உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரிப்பார்கள். இந்த பாகத்தில் உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் அதிக பின்னடைவுகள் ஏற்படக் கூடும். எனினும், இந்த பாகத்தில் உங்கள் உடல் நலம் மற்றும் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. உங்கள் குடும்பத்தினர்களுடன் நல்ல ஆரோக்கியமான உறவு நிலையில் இருப்பீர்கள். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியை பார்வை இடுவதால், நீங்கள் சற்று பதற்றமான நிலையில் இருப்பீர்கள்.
எனினும், உங்களுக்கு எதிராக அலுவலகத்தில் நடக்கும் அரசியல் அதிகமாக இருக்கும். இதனால் உங்கள் மன நிம்மதி பாதிக்கப்படும். குறிப்பாக உங்களுக்கு பதவி உயர்வு கிடைத்திருந்தால், நீங்கள் உங்கள் மறைமுக எதிரிகளையும், உங்களுக்கு எதிரான சதிகளையும் சமாளிக்க வேண்டிய சூழல் இருக்கும். உங்கள பிறந்த சாதக பலன் நன்றாக இல்லையென்றால், உங்களுக்கு பதவி இறக்கும் ஏற்பட்டு, நீங்கள் முந்தைய நிலைக்கே பின் தள்ளப்படலாம். எனினும், நீங்கள் உங்கள் உத்தியோகத்தில் பாதுகாப்பாக இருப்பீர்கள். தொழிலதிபர்கள் ப்ரோஜெக்ட்டை தக்க நேரத்தில் முடிப்பதற்காக அழுத்தம் நிறைந்த சூழலில் பணி புரிய வேண்டிய நிலை இருக்கும்.
முடிந்த வரை இந்த பாகத்தில் பயணத்தை தவிர்ப்பது நல்லது. உங்கள் குடியேற்ற பலன்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் தேக்கம் பெரும். சனி பகவான் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டை பார்வை இடுவதால், நீங்கள் உங்கள் நிதி நிலை குறித்த விடயங்களில் கவனமாக இருக்க வேண்டும், செலவுகள் அதிகரிக்கும். இதனால் உங்கள் சேமிப்பு பாதிக்கப்படலாம். ஸ்பெகிலேடிவ் வர்த்தகம் செய்வதை தவிர்ப்பது நல்லது. அது உங்கள் நிதி நிலையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். இந்த காலகட்டத்தில் எந்த விதமான ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளையும் செய்யாமல் இருப்பது நல்லது.
Prev Topic
Next Topic



















