![]() | 2020 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | மூன்றாம் பாகம் |
ஜூலை 01, 2020 முதல் நவம்பர் 20, 2020 வரை சிறப்பான நேரம் (80 / 100)
குரு பகவான் உங்கள் ராசியின் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல நிவாரணத்தை தருவார். கடந்த மாதங்களில் உங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளில் இருந்து வெளி வருவீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். குரு செப்டம்பர் 13, 2020 அன்று வக்கிர நிவர்த்தி அடைவதால், உங்களுக்கு இந்த காலகட்டத்தில் பண மழை பொழியும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எந்த மருத்துவ செலவுகளும் இருக்காது. உங்கள் மனைவி /கணவன் மற்றும் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் செய்யும் எந்த விடயமாக இருந்தாலும், அது உங்களுக்கு பெரிய அளவில் வெற்றியைத் தரும்.
நீங்கள் நல்ல உற்சாகத்தோடு இருப்பீர்கள். உங்களை நோக்கி மக்கள் ஈர்க்கப்படுவார்கள். நீங்கள் இந்த காலகட்த்தில் காதலில் விழுந்தாலும், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. உங்களுக்கு ஏற்ற வரனை பார்த்து, திருமணத்தை நிச்சயம் செய்ய இது சிறப்பான நேரம். திருமணம் ஆன தம்பதியினர் இந்த பாக காலகட்டத்தில் நல்ல அன்யுனியதோடு இருப்பார்கள். சுப காரியங்களை நிகழ்த்துவதால், மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரையும், செல்வாக்கையும் பெரும்.
நீண்ட காலமாக நீங்கள் காத்திருந்த பதவி உயர்வும், சம்பள உயர்வும் தற்போது கிடைக்கும். உங்களுக்கு கிடைக்கும் பங்குகள், சன்மானங்கள், போனஸ் மற்றும் வருமானத்தால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பெரிய நிறுவனத்தில் இருந்து உங்களுக்கு கிடைக்கும் வேலை வாய்ப்பை ஏற்றுக் கொண்டு, புது வேலையில் சேர இது நல்ல நேரம். உங்கள் வேலை சுமையை நீங்கள் எளிதாக சமாளிப்பீர்கள். தொழிலதிபர்கள் சிறப்பான நேரத்தை காண்பார்கள். தொழிலில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் வங்கி கணக்கில் அதிக பணம் சேருவதால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம். புது வாகனம் மற்றும் தங்க நகைகள் வாங்குவதில் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.
Prev Topic
Next Topic