2020 புத்தாண்டு பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள்


தொலை தூர பயணம் மற்றும் குறுகிய தூர பயணம், இரண்டுமே இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக உள்ளது. கடந்த செப்டம்பர் 2019 வாக்கில் உங்களுக்கு விசா குறித்த பிரச்சனைகளும், குடியேற்றம் பெறுவதில் பிரச்சனைகளும் ஏற்பட்டிருக்கும். தற்போது, இந்த ஆண்டு நீங்கள் அந்த பிரச்சனைகளில் இருந்து வெளி வந்து விடுவீர்கள்.
ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு நிரந்தர குடியேற்ற விசா பெற விண்ணப்பிக்க இது நல்ல நேரம். குறிப்பிடத்தக்க அரசு சட்ட மாற்றங்கள், உங்களுக்கு விரைவாக கிரீன் கார்டு / EAD கிடைக்க உதவியாக இருக்கும். வெளிநாட்டிற்கு குடிபெயருவதால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.


பயண சீட்டு முன் பதிவு செய்வது, தங்கும் விடுதி, மற்றும் வாடகைக்கு கார் எடுப்பது போன்ற விடயங்களில் உங்களுக்கு நல்ல சலுகைகள் கிடைக்கும். இந்த ஆண்டு உங்கள் பயணத்தின் போது நல்ல சௌகரியமும், ஆடம்பர வசதிகளும் கிடைக்கும். நீங்கள் வெளிநாட்டில் வசித்துக் கொண்டிருந்தாள், உங்கள் பெற்றோர்கள் ஜூலை முதல் நவம்பர் 2020 வரையிலான காலகட்டத்தில் உங்களை சந்திக்க வருவார்கள். இதனால் உங்களுக்கு மன ரீதியாக நல்ல பலமும், மகிழ்ச்சியும் உண்டாகும். நீங்கள் புது வாகனம் / கார் வாங்க திட்டமிட்டால், அதற்கு இந்த ஆண்டு சிறப்பாக் உள்ளது.


Prev Topic

Next Topic