![]() | 2020 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
இந்த ஆண்டு உங்கள் உத்தியோகம் குறித்த விடயங்கள் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு தற்போது வேலை இல்லை என்றாலோ, அல்லது தற்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் மகிழ்ச்சியாக இல்லை என்றாலோ, நீங்கள் புது வேலைக்கு முயற்சி செய்யத் தொடங்கலாம். உங்களுக்கு நல்ல சம்பளத்தோடு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும் நல்ல பதவிக்கும், சம்பளத்திற்கும் நீங்கள் பேச முயற்சிக்கலாம். குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் மறைமுக எதிரிகளை அழிப்பார். அதனால், நீங்கள் உங்கள் உத்தியோகத்தில் விரைவான வளர்ச்சியையும், வெற்றியையும் பெறுவீர்கள். நல்ல முன்னேற்றம் தரக்கூடிய ப்ரோஜெக்ட்டில் வேலை பார்ப்பீர்கள். உங்களுக்கு இந்த 2020ஆம் ஆண்டு நல்ல சம்பளத்தோடு பதவி உயர்வும் கிடைக்கும்.
வெளிநாட்டிற்கு குடி பெயர இது நல்ல நேரம். உங்கள் அலுவலக வேலையை எளிதாக சமாளிப்பீர்கள். நீங்கள் அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தாள், அது உங்களுக்கு மார்ச் 2020 வாக்கில், அல்லது செப்டம்பர் 2020 வாக்கில்நிச்சயம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களுக்கு விரும்பிய இடத்தில வேலை செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். மேலும் உங்கள் நிறுவனத்திற்குள்ளேயே இட மாற்றம், உள்ளூரிலியே இட மாற்றம் அல்லது வெளிநாட்டில் இடமாற்றம் என்று கிடைக்க வாய்ப்பு உள்ளது. நவம்பர் 20, 2020 முதல் குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிற்கு பெயர்ந்த பின் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு டிசம்பர் 2020ல் சில பின்னடைவுகள் ஏற்படக் கூடும்.
Prev Topic
Next Topic