![]() | 2020 புத்தாண்டு தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் |
தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்
தொழிலதிபர்கள் கடந்த அக்டோபர் 2019 வரை நல்ல சிறப்பான காலகட்டத்தை கண்டிருப்பார்கள். தற்போது, குரு நவம்பர் 2019 முதல் நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை. மேலும் சனி பகவான் ஜனவரி 23, 2020 முதல் உங்களுக்கு எதிராக சஞ்சரிக்கின்றார். இந்த 2020ஆம் ஆண்டு உங்கள் பங்குதாரருடன் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படக் கூடும். மார்ச் 2020 மற்றும் செப்டம்பர் 2020 வாக்கில் உங்கள் மீது தவறான குற்றம் சாட்டப் பட்டாலும், சட்ட பிரச்சனைகள் ஏற்பட்டாலும், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
உங்கள போட்டியாளர்கள் உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் சதிகளை செய்வார்கள். உங்கள் மறைமுக எதிரிகள் குரு உங்கள் ராசியின் ரூன ரோக சத்ரு ஸ்தானத்திற்கு பெயருவதால், அதிக பலம் பெறுவார்கள். பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப் படலாம். உங்கள் பிறந்த சாதகத்தின் பலன் இல்லாமல் தொழிலை தொடர்ந்து நடத்துவது நல்ல யோசனையாக இருக்காது. உங்கள் நிதி தேவைகளை சமாளிக்க நீங்கள் கடன் வாங்க வேண்டிய சூழல் உண்டாகலாம். அரசின் அறிக்கைகளாலும், சட்ட மாற்றங்களாலும், பண மதிப்பீட்டின் காரணமாகவும் அல்லது வேறு காரணங்களாலும் உங்கள் தொழிலில் பின்னடைவுகள் எதிர்பாரா விதமாக ஏற்படக் கூடும்.
சரியான நேரத்தில் உங்காள் ப்ரோஜெக்ட்டை முடிக்க முடியாததால், உங்கள் நற்பெயர் பாதிக்கக் கூடும். உங்கள் போட்டியாளர்கள் உங்களது இந்த பலவீனமான நேரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள். உங்கள் தொழிலை தற்சமயம் விரிவு படுத்தும் முயற்சியை தவிர்பப்து நல்லது, மாறாக செலவுகளை கட்டுப்படுத்தவும், குறிப்பாக நிர்வாக செலவுகளை கட்டுப்படுத்தும் முயற்சிகளை எடுப்பது நல்லது. சுயதொழில் புரிவோர்கள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள், மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் எந்த பலனும் இல்லாமல் கடுமையாக உழைக்க வேண்டிய சூழலில் இருப்பார்கள்.
Prev Topic
Next Topic