2020 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்


கடந்த 2019ஆம் ஆண்டு உங்களுக்கு சிறப்பாக இருந்திருக்கும். இந்த 2020ஆம் ஆண்டு நீங்கள் கலவையான பலன்களைப் பெறுவீர்கள். உங்களை சுற்றி இருப்பார்கள் உங்களது விரைவான வளர்ச்சி, புகழ் மற்றும் சாதனைகளை கண்டு உங்கள் மீது பொறாமைப் படக் கூடும். உங்கள் மீது திருஷ்டி படக் கூடும். குரு 6ஆம் வீட்டில் சஞ்சரித்தால், பொதுவாக கசப்பான அனுபவங்களை தரக் கூடும். எனினும், அதிர்ஷ்டவசமாக, உங்களுக்கு குரு 6 மற்றும் 7ஆம் வீட்டிற்கும் இடைய பெயருவதால், பெரிதாக எந்த பாதிப்புகளும் இருக்காது.
உங்கள் குடும்பத்தில் பெப்ரவரி, மற்றும் மார்ச் மாதங்களில் சனி பகவான் மகர ராசிக்கு பெயந்ததும் சில சண்டைகள் ஏற்படக் கூடும். எனினும், உங்களது இந்த சோதனை காலம் குறுகிய காலத்திற்கு மட்டுமே. குரு மகர ராசிக்கு ஏப்ரல் 2020 முதல் 3 மாதங்களுக்கு பெயர்ந்ததும் உங்களுக்கு சிறப்பான நிவாரணம் கிடைக்கும். நீங்கள் ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2020 ஆகிய மாதங்களில் கவனமாக இருக்க வேண்டும். மற்றபடி, இந்த ஆண்டின் பிற மாதங்கள் உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும். இது மற்றுமொரு நல்ல ஆண்டாகவே உங்களுக்கு அமையும். நீங்கள் சுப காரியங்கள் நிகழ்த்த விரும்பினால், அதனை ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரையிலான காலகட்டத்திலேயே செய்து விட திட்டமிடுங்கள், அல்லது நவம்பர் 2020 வரை காத்திருந்து, அதன் பின்னர் சுப காரியங்களை நடத்தலாம்.




Prev Topic

Next Topic