![]() | 2020 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | நான்காம் பாகம் |
நவம்பர் 20, 2020 முதல் டிசம்பர் 31, 2020 வரை சிறப்பான நேரம் (80 / 100)
இந்த பாகத்தை நீங்கள் அடைந்ததால் மகிழ்ச்சியாக இருக்கலாம். குரு உங்கள் ராசியின் களத்திற ஸ்தானத்திற்கு சனி பகவானோடு இணைந்து சஞ்சரிகின்றார். இந்த சஞ்சாரம் இரண்டு கிரகங்களுக்கும் இடையே நீச்ச பங்க ராஜ யோகத்தை உருவாக்கும். உங்கள் வளர்ச்சியின் வேகம் மற்றும் நிவாரணத்தின் வேகம் உங்கள் பிறந்த சாதகத்தை பொறுத்தே உள்ளது. இந்த பாகத்தை நீங்கள் அடைந்ததும், உங்களுக்கு நல்ல மன நிம்மதி ஏற்படும். உங்கள் உடல் உபாதைகளில் இருந்தும், மன வலியில் இருந்தும் வெளி வருவீர்கள். உங்கள் குடும்பத்தினர்களின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்வீர்கள். உங்கள் குடும்பத்தினர்களுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை வெற்றிகரமாக சரி செய்வீர்கள். காதலர்கள் தங்களுக்குள் நல்ல உறவு ஏற்பட்டதை எண்ணி மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்கள குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் ஒப்புதல் தருவார்கள்.
நீங்கள் தற்போது வேலை தேடிக் கொண்டிருந்தாள், புது வேலைக்கு முயற்சி செய்து, நேர்காணலுக்கு செல்ல இது நல்ல நேரம். இந்த நேரத்தை பயன்படுத்தி நீங்கள் கடந்த காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களில் இருந்து வெளி வந்து, மனதில் பலத்தை அதிகரித்துக் கொண்டு நேர்காணலுக்கு உங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த ஓரிரு மாதங்களில் உங்களுக்கு ஒரு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விசா மற்றும் குடியேற்ற பலன்கள் பெறுவதில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
Prev Topic
Next Topic