2020 புத்தாண்டு உடல் நலம் ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி)

உடல் நலம்


குரு உங்கள் ரூன ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு உடல் உபாதைகளை உண்டாக்கக் கூடும். சனி பகவான் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் நிலையை மேலும் மோசமாக ஆக்க நேரிடும். ராகு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு உடலில் பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். மொத்தத்தில் நீங்கள் உங்கள் உடல் நலத்திற்கு அதிக முக்கியத்துவத்தை இந்த ஆண்டு கொடுக்க வேண்டும். குரு ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரையிலான காலகட்டத்தில் மகர ராசிக்கு அதி சரமாய் பெயரும் போது உங்கள் உடலில் இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு பெற உதவுவார்.
உங்களுக்கு ஜூலை முதல் செப்டம்பர் 2020 வரையிலான காலகட்டத்தில் சருமத்தில் பிரச்சனைகள், கண்களில் பிரச்சனைகள் அல்லது கல்லீரல், பித்தப்பை அல்லது வயிற்றில் பிரச்சனைகள் ஏற்படக் கூடும். ராகு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டிற்கு பெயர்ந்ததும், நீங்கள் விரைவாக குணமடைவீர்கள். குரு உணல் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பது, உங்களுக்கு ஒரு எச்சரிக்கை அறிகுறி. எனினும், முக்கிய கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிபப்தால், பெரிய அளவு பாதிப்புகள் ஏற்படாது. உங்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டாலும், அதில் இருந்து உடனடியாக குணமடைவீர்கள். மூச்சு பயிற்சி மற்றும் த்யானம் செய்து உங்கள் நேர்மறை சக்திகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். ஹனுமான் சாலிச மற்றும் ஆதித்ய ஹ்ருதயம் கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும்.




Prev Topic

Next Topic