![]() | 2020 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | காதல் |
காதல்
கடந்த ஆண்டு அக்டோபர் 2019 வரை உங்கள் காதல் விடயங்களுக்கு சிறப்பான நேரமாக இருந்திருக்கும். குரு தற்போது 6ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் உறவில் சில உராய்வுகளை உண்டாக்கக் கூடும். உங்களால் நீங்கள் விரும்புபவருடன் நேரத்தை செலவிட முடிந்தாலும், சனி பகவான் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், காதல் சற்று குறைந்து காணப்படும். உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்களின் ஒப்புதலை பெறுவது சற்று கடினமாக இருக்கக் கூடும். எனினும், ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரையிலான காலகட்டத்தில், உங்கள் முயற்சியில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
உங்கள் மனைவி /கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர்களுடன் சில கருத்துவேறுபாடுகள் ஏற்படக் கூடும். உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், விடயங்கள் உங்கள் கட்டுபாட்டை மீறி நடக்காது. உங்கள் பிரச்சனைகளை குறுகிய காலத்திற்குள்ளேயே சரி செய்து விடுவீர்கள். சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அது பெரியாத பாதிப்பை உண்டாக்காது. ராகு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் செப்டம்பர் 2020 வாக்கில் சஞ்சரிப்பதால், குரு பகவானால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
திருமணம் ஆன தம்பதியினர் கலவையான பலன்களைப் பெறுவார்கள். எனினும், குழந்தை பேரு பெற வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதகத்தின் பலன் இருக்க வேண்டும். செப்டம்பர் 2020 வாக்கில் செவ்வாய் வக்கிர கதி அடைவதால், நீங்கள் IVF மற்றும் IUI போன்ற மருத்துவ சிகிச்சைகளை தவிர்ப்பது நல்லது. கர்ப்பிணி பெண்கள், உங்கள் உடல் நலத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்.
Prev Topic
Next Topic