![]() | 2020 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | மூன்றாம் பாகம் |
ஜூலை 01, 2020 முதல் நவம்பர் 20, 2020 வரை உடல் நலம், உத்தியோகம், மற்றும் நிதி நிலையில் பிரச்சணைகள் (35 / 100)
குரு பகவான் உங்கள் ராசியின் 6ஆம் வீடிருக்கு ரூன ரோக சத்ரு ஸ்தானத்திற்கு பெயருவார். உங்களுக்கு கடந்த மாதங்களில் கிடைத்த நிவாரணம் தற்போது முடிவுக்கு வரும். குரு செப்டம்பர் 13, 2020 அன்று வக்கிர நிவர்த்தி அடைகிறார். விடயங்கள் இந்த பாகத்தில் உங்கள் கட்டுபாட்டை மீறி நடக்கக் கூடும்.
உங்களுக்கு உடல் நல பிரச்சனைகள் ஏறபடக் கூடும். எந்த ஒரு எச்சரிக்கை அறிகுறி ஏற்பட்டாலும், அதனை உதாசினப்படுத்தாமல், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. உங்கள் மனைவி/கணவனின் உடல் நலம் பாதிக்கக் கூடும். உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கக் கூடும். உங்கள் மனைவி/கணவன் உங்கள் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருக்க மாட்டார். உங்கள் மனைவி/கணவன் வீட்டார்கள் உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். குடும்பத்தில் அதிகரிக்கும் பிரச்சனைகளால் உங்கள் மன நிம்மதி பாதிக்கக் கூடும். இந்த பாகத்தில் சுப காரியங்கள் நிகழ்த்துவதை தவிர்ப்பது நல்லது. காதலர்கள் கசப்பான அனுபவங்களை சந்திக்கக் கூடும்.
அலுவலகத்தில் ஏற்படும் அரசியலால் உங்கள் உத்தியோகம் பாதிக்கப்படலாம். உங்களுடன் வேலை பார்ப்பவர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டால், அது உங்கள் நற்பெயரையும், செல்வாக்கையும் பாதிக்கக் கூடும். உங்களுக்கு தற்போது வேலை பாருக்கும் நிறுவனத்தில் இருந்து நல்ல சம்பளத்தையும், பதவியையும் எதிர் பார்க்க முடியாது. இது தொழிலதிபர்களுக்கு ஒரு சோதனை காலமாக இருக்கும். சுய தொழில் புரிவோர்கள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் எந்த பலனும் இன்றி கடினமாக உழைக்கக் நேரிடும்.
உங்கள் நிதி நிலை சிறப்பாக இல்லை. உங்களுக்கு புதிதாக கடன் ஏற்படுவதால், உங்கள் மன நிம்மதி பாதிக்கக் கூடும். இந்த காலகட்டத்தில் பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப் படலாம். ரியல் எஸ்டேட் சொத்துக்கள் குறித்த விடயங்களில் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படக் கூடும். எந்த விதமான ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளையும் தவிர்ப்பது நல்லது. பங்கு சந்தை உங்களுக்கு அதிக நட்டத்தையும், நிதி இழப்பையும் ஏற்படுத்தக் கூடும்.
Prev Topic
Next Topic