![]() | 2020 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
குரு உங்கள் ராசியின் ரூன ரோக சத்ரு ஸ்தானத்திற்கு பெயருவதால், இந்த 2020ஆம் ஆண்டு உங்கள் பங்கு சந்தரி வர்த்தகத்தில் அதிர்ஷ்டம் குறைந்தே காணப்படும். பெப்ரவரி 2020 முதல் நீங்கள் பங்கு சந்தை வர்த்தகத்தில் பணத்தை இழக்க நேரிடும். உங்களது பங்கு சந்தை கணிப்புகளும், திட்டங்களும் தவறாகக் கூடும். இதனால் அடிப்படை விடயங்களில் கூட நீங்கள் அதிக உணர்ச்சிவசப்பட்டு தவறான முடிவுகளை எடுக்கக் கூடும்.
உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் பங்கு சந்தை வர்த்தகத்தை விட்டு முற்றிலுமாக விலகி இருப்பது நல்லது. நீங்கள் நீண்ட கால முதலீடு செய்தவராக இருந்தால், உங்கள் முதலீட்டை பணமாக்கி விட்டு, பங்கு சந்தையை விட்டு வெளியேறுவது நல்லது. ரிஸ்க் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. அரசு பத்திரம், அல்லது சேமிப்பு, அல்லது வைப்பு நிதி போன்றவற்றில் உங்கள் பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வது நல்லது. முக்கிய கிரகங்கள் இணைந்து சஞ்சரிப்பதால், உங்களுக்கு பங்கு சந்தையில் பெரும் அளவு இழப்பு ஏற்படக் கூடும்.
ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளை ஜனவரி 2020 முதல் மார்ச் 2020 வரை மற்றும் ஆகஸ்ட் 2020 முதல் அக்டோபர் 2020 வரையிலான காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது. நீங்கள் உங்கள் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால், அதனால் குடி இருப்பவர்களால் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படக் கூடும். அல்லது உங்கள் நிலத்தை பிறர் பயன்படுத்துவதால் பிரச்சனைகள் ஏற்படக் கூடும். கட்டிடம் கட்ட ஒப்புதல் வாங்குவதில் உங்களுக்கு கடினமான சூழல் உண்டாகலாம்.
Prev Topic
Next Topic