2020 புத்தாண்டு பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி)

பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள்


இந்த 2020ஆம் ஆண்டு தொலைதூர பயணம் உங்களுக்கு எதிர்பார்த்த அதிர்ஷ்டத்தை தராமல் போகலாம். சனி பாவகன் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிற்கு பெயருவதால், நீங்கள் பெப்ரவரி 2020 முதல் புது இடத்தில் அதிக தனிமையை உணரக் கூடும். மேலும் உங்களுக்கு போதிய தங்கும் வசதி இல்லாமல் போகலாம். அடிக்கடி வீட்டை மாற்றுவதால் நீங்கள் தஹிக பணத்தை இடமாற்றதிர்க்காகவே செலவு செய்ய வேண்டிய சூழல் உண்டாகலாம்.
பயணத்தின் போது அதிக தடைகளும், பிரச்சனைகளும் ஏற்படக் கூடும். திருட்டு நடக்க வாய்ப்பு உள்ளதால், உங்கள் வீட்டில் இருக்கும் விலையுயர்ந்த பொருட்களுக்கு போதிய காப்பீட்டை எடுத்துக் கொள்வது நல்லது. உங்கள் தங்க நகைகளை வங்கி பெட்டகத்தில் வைப்பது நல்லது. உங்கள் பயணத்தில் தேவையற்ற மாற்றங்களும், இறுதி நேரம் பயணம் இரத்தாவதும் போன்ற சூழல்கள் ஏற்படக் கூடும். இதனால் உங்கள் நிதி நிலை பெரிதும் பாதிக்கக் கூடும்.


எந்த விதமான குடியேற்ற பலன்களை எதிர்பார்க்க இது சரியான நேரம் இல்லை. உங்களுக்கு பெப்ரவரி 2020 முதல் விசா குறித்த பிரச்சனைகள் ஏற்படக் கூடும். நீங்கள் வேலை காரணமாக உங்கள் பெட்டிஷனை புதுபிக்க விண்ணப்பித்தால், அது எந்த ஒரு தெளிவான காரணமும் இல்லாமல் தேக்கம் அடையலாம். நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் கன்சல்டன்சி நிறுவனத்தின் கீழ் வேலை பார்த்தால், நீங்கள் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய சூழல் உண்டாகலாம். நவம்பர் 2020 வரை உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல் வெளிநாட்டு பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது.



Prev Topic

Next Topic