![]() | 2020 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
உங்கள் உத்தியோகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு சுமூகமான ஒரு சூழலை சந்தித்திருந்திருப்பீர்கள். எனினும், இந்த 2020ஆம் ஆண்டு அப்படி இருக்காது. உங்களது விரைவான வளர்ச்சி மற்றும் வெற்றியைக் கண்டு பிறர் உங்கள் மீது பொறாமை படக் கூடும். உங்கள் ரூன ஓரக சத்ரு ஸ்தானம் பாதிக்கப்படுவதால், உங்கள் மறைமுக எதிரிகளால் உங்களுக்கு பிரச்சனைகள் உண்டாகக் கூடும். அலுவலகத்தில் ஏற்படும் அரசியல் உங்கள் மன நிம்மதியை பாதித்து விடக் கூடும். உங்களுடன் வேலை பார்ப்பவர்களுடன் உங்களுக்கு மார்ச் 2020 மற்றும் செப்டம்பர் 2020 வக்கீல் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்படக் கூடும்.
பெப்ரவரி 2020 முதல் நீங்கள் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்ற பலன்களை எதிர் பார்க்க முடியாது. உங்கள் வேலை சுமை, உங்கள் உத்தியோக வாழ்க்கையை பாதிக்கக் கூடும். உங்கள் முதலாளி உங்கள் செயல் திறனைக் கண்டும், உங்கள் கடின உழைப்பை கண்டும் மகிழ்ச்சி அடைய மாட்டார். ஆகஸ்ட் 2020 முதல் அக்டோபர் 2020 வரையிலான காலகட்டத்தில் கேது, சனி பகவான், செவ்வாய் மற்றும் குரு மோசமான நிலையில் சஞ்சரிபதால், நீங்கள் கடுமையான சோதனை காலத்தை சந்திப்பீர்கள். உங்கள் அலுவலகத்தில் எச் ஆரிடம் உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் மேலாளர் என்று யாரை பற்றியும் புகார் கூறாமல் இருங்கள். அப்படி செய்தால், அது உங்களுக்கே மீண்டும் பிரச்சனையாக முடிந்து விடும். அலுவலகத்தில் நடக்கும் அரசியலை சமாளிப்பது உங்களுக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும். நீங்கள் சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு போன்றவற்றை எதிர் பார்த்தால், குறிப்பாக ஆகஸ்ட் 2020 முதல் அக்டோபர் 2020 வரையிலான காலகட்டத்தில் அவை உங்களுக்கு ஏமாற்றத்தையே தரும்.
உங்கள் அலுவலகத்தில், நீங்கள் தற்போது இருக்கும் நிலையிலேயே இருந்தாலே, அதுவே உங்களுக்கு ஒரு பெரிய சாதனையாக இருக்கும். உங்களால் உங்கள் நிறுவனத்தில் இருந்து குடியேற்றம், இடமாற்றம் அல்லது காப்பீட்டு பலன்கள் என்று எதையும் எதிர் பார்க்க முடியாது. மேலும் சில மோசமான் சூழலில் நீங்கள் குறிப்பாக செப்டம்பர் 2020 வாக்கில் உங்கள் விசா அந்தஸ்த்தை இழக்கவும் கூடும். மேலும் அதனால் நீங்கள் உங்கள் தாய் நாட்டிற்கு திரும்பும் சூழல் உண்டாகலாம். நீங்கள் ஒப்பந்தம் அடிப்படையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள், ஆகஸ்ட் 2020 முதல் அதில் நீங்கள் நல்ல பலனை எதிர் பார்க்க முடியாது. உங்கள் ஒப்பந்தம் புதுபிக்கப்படாது. எந்த ஒரு முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றாலும், அதற்கு முன் உங்கள் பிறந்த சாதகத்தின் பலனை பார்த்து, அதற்கு ஏற்றபடி நடந்து கொள்வது நல்லது.
Prev Topic
Next Topic