2020 புத்தாண்டு தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்


தொழிலதிபர்கள் கடந்த ஒரு ஆண்டுகாலமாக கலவையான பலன்களை பெற்றிருப்பார்கள். தற்போது விடயங்கள் மோசமாகக் கூடும், குரு பகவான் உங்கள் விரைய ஸ்தானத்திற்கும் ஜென்ம ஸ்தானத்திற்கும் பெயருவதாலும், சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பெயருவதாலும், நீங்கள் தன்னம்பிக்கையை இழக்க கூடும், நீங்கள் அனைத்தையும் சரியாக செய்தாலும், நீங்கள் எதிர் பார்த்த பலனை பெற முடியாமல் போகலாம். நீங்கள் உங்கள் போட்டியாளர்களால் உங்களுக்கு கிடைக்கவிருக்கும் நீண்ட கால ப்ரொஜெக்ட்டை இழக்க கூடும். உங்கள் மறைமுக எதிரிகள் உங்கள் வளர்ச்சியை கெடுக்க உங்களுக்கு எதிரான சதிகளை செய்வார்கள்.
உங்களுக்கு எதிராக யார் செயல்படுகின்றார்கள் என்று உங்களுக்கு தெரியாமல் இருக்கும். பண வரத்து பெரும் அளவு பாதிக்கக் கூடும். உங்கள் வங்கி கடன் ஒப்புதல் பெறாமல் போகலாம்,. பண விடயங்களில் நீங்கள் அதிகம் நம்பினவர்களே உங்களை ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரையிலான காலகட்டத்தில் உங்களை ஏமாற்றக் கூடும். உங்களிடம் வேலை பார்ப்பவர்கள் உங்களை ஏமாற்றி விட்டு உங்கள் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விடக் கூடும். உங்களுக்கு வருமான வரி பிரச்சனைகள் மற்றும் சட்ட பிரச்சனைகள் ஏற்படக் கூடும். மோசமான சூலில், நீங்கள் உங்கள் தொழிலை தொடர்ந்து நடத்தவும், அதற்கு தேவையான பண வரத்தை ஏற்படுத்தவும் உங்கள் சொத்துக்களை விற்க வேண்டிய சூழல் உண்டாகலாம்.


சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், கமிசன் ஏஜெண்டுகள் மற்றும் இன்சூரன்ஸ் ஏஜெண்டுககளுக்கு இது நல்ல நேரம் இல்லை. நீங்கள் நீண்ட காலத்திற்கு உங்கள் தொழிலை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதகத்தின் பலன் இருக்க வேண்டும். பெப்ரவரி 2020 முதல் அடுத்த 2 – 3 ஆண்டுகளுக்கு நீங்கள் அதிக சவால்களை சந்திப்பீர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நேரம் சிறப்பாக இருக்கும் உங்கள் மனைவி /கணவன் அல்லது குழந்தைகளின் பெயரை உங்கள் தொழிலில் சேர்த்துக் கொள்வது நல்லது. இல்லையென்றால், உங்கள் சோதிடரை அணுகி ஆலோசனை பெற்று அதன் படி முடிவுகள் எடுப்பது நல்லது.



Prev Topic

Next Topic