![]() | 2020 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
உங்கள் குடும்ப சூழலில், குரு பகவான் லாப ஸ்தானத்திலும், ராகு பகவான் ரூன ரோக சத்ரு ஸ்தானத்திலும் அக்டோபர் 2019 வரை சஞ்சரித்ததால், சற்று நல்ல நிலை ஏற்பட்டிருக்கும். எனினும், இந்த 2020ஆம் ஆண்டு ஜென்ம சனி தொடங்க உள்ளதால், விடயங்கள் சிறப்பாக இருக்காது.
ஏழரை சனியின் தாக்கம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, 2020, மற்றும் 2021, ஆகிய ஆண்டுகளில் அதிகமாக இருக்கும். உங்களுக்கு உறவுகளில் ஏமாற்றங்களும், தோல்விகளும் ஏற்படக் கூடும். நீங்கள் தூக்கம் இல்லாத பல இரவுகளை சந்திக்க நேரிடும். உங்கள் மனைவி/கணவன் மற்றும் பிற நெருங்கிய குடும்பத்தினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படக் கூடும்.
ஜனவரி, பெப்ரவரி, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் குரு நல்ல நிலையில் சஞ்சரிபப்தால், இந்த மாதங்களில் நீங்கள் சுப காரியங்கள் நிகழ்த்த திட்டமிடலாம். எனினும், சனி பகவான் அதிக மன அழுத்தத்தை உண்டாக்கி, சுப காரியங்கள் நிகழ்த்தும் போது உங்களுக்கு அதிக கடுமையான சூழலை உண்டாக்கக் கூடும். நீங்கள் வரும் நாட்களில் எந்த ஒரு முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றாலும், அதற்கு முன் உங்கள் பிறந்த சாதகத்தின் பலனை பார்த்து, அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்வது நல்லது.
Prev Topic
Next Topic