2020 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

நவம்பர் 20, 2020 முதல் டிசம்பர் 31, 2020 வரை இழப்புகள் (25 / 100)


குரு மற்றும் சனி பகவான் இணைந்து உங்கள் ஜென்ம ராசியில் இந்த பாகத்தில் சஞ்சரிக்கின்றனர். இந்த் காலகட்டத்தில் எதுவும் சரியாக இருக்காது. புது பிரச்சணைகள் ஏற்படுவதால், நீங்கள் மிக மோசமான சூழ்நிலையில் இருப்பீர்கள். விடயங்கள் உங்கள் கட்டுபாட்டை மீறி நடக்கக் கூடும். இந்த காலகட்டத்தில் நீங்கள் கடவுள் வழிபாட்டின் அருமை, சோதிடம் மற்றும் வழிபாடுகளின் அருமையை புரிந்து கொள்வீர்கள்.
உடல் உபாதைகள் அதிகர்க்கக் கூடும். உங்கள் பெற்றோர்களின் உடல் நலம் பெரும் அளவு பாதிக்கக் கூடும். உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கக் கூடும். மேலும் அத்தகைய செலவுகளை காப்பீட்டின் மூலம் ஈடு கட்ட முடியாமலும் போகலாம். உங்கள் குடும்பத்தில் ஒரு பதற்றமான சூழல் நிலவும். உங்கள் மனைவி/கணவன், மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மற்றும் குழந்தைகளுடன் அதிக வாக்குவாதங்களும், சண்டைகளும் ஏற்படக் கூடும். சுப காரியங்கள் நிகழ்த்த இது ஏற்ற நேரம் இல்லை. IVF மற்றும் IUI போன்ற மருத்துவ சிகிச்சைகள் உங்களுக்கு ஏமாற்றங்களை உண்டாக்கக் கூடும்.


உங்களுக்கு எதிரான சதிகளால், உங்கள் அலுவலக வாழ்க்கை பாதிக்கக் கூடும். உங்கள் மீது தவறு இல்லையென்றாலும், நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். உங்கள் மீது குற்றம் சாட்டப் படும். இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் உத்தியோத்தை இழக்கும் சூழல் உண்டாகலாம். உங்கள் நிதி நிலை மோசமாக இருக்கக் கூடும். முதலீடுகள் செய்வதால், நீங்கள் உங்கள் பணத்தை இழக்க கூடும். மேலும் பண விடயங்களில் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களை ஏமாற்றக் கூடும். மொத்தத்தில் நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு இந்த கடுமையான காலகட்டத்தை உங்கள் வாழ்க்கையில் கடக்க வேண்டும்.



Prev Topic

Next Topic