2020 புத்தாண்டு உடல் நலம் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

உடல் நலம்


சனி பகவான் மற்றும் கேது இணைந்து சஞ்சரித்து உங்கள் உடல் நலத்தை அதிகம் பாதித்திருண்டிருக்கக் கூடும். மேலும் அவர்கள் உங்களுக்கு மன உளைச்சல்களையும் ஏற்படுத்தி இருந்திருக்கக் கூடும். தற்போது ஜனவரி 23, 2020 முதல் உங்களுக்கு ஜென்ம சனி தொடங்க உள்ளதால், உங்களுக்கு தற்போது இருக்கும் நிலையை விட மேலும் மோசமாகக் கூடும், நீங்கள் உங்கள் உணவின் மீது கவனம் செலுத்த வேண்டும். மேலும் உடற்பயிற்சி செய்து உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
பெப்ரவரி 2020 முதல் நவம்பர் 2020 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு அதிக உடல் நல பிரச்சனைகள் ஏற்படக் கூடும். உங்கள் மனைவி /கணவன், குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் உடல் நலம் பாதிக்கக் கூடும். உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கக் கூடும். போதிய மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது.


ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரையிலான காலகட்டத்தில் குரு, சனி பகவானுடன் இணைந்து சஞ்சரிப்பதால், உங்கள் உடல் நல பிரச்சனைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். தினமும் காலையில் ஆதித்ய ஹ்ருதயம் மற்றும் ஹனுமான் சாலிச கேட்பதால் அதிக பலத்தை பெறுவீர்கள். சுதர்சன மகா மந்திரம் கேட்பதாலும், சற்று ஆறுதலாக இருக்கும்.


Prev Topic

Next Topic