![]() | 2020 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | காதல் |
காதல்
காதலர்கள் கடந்த ஆண்டு கலவையான பலன்களை பெற்றிருப்பார்கள். எனினும், உங்கள் உறவில் தற்போது அதிக சவால் நிறைந்த நேரம் உண்டாகக் கூடும். ஏழரை சனியின் தாக்கம் கடுமையாகக் கூடும். ஜனவரி 2020 முதல் அடுத்த 2.5 ஆண்டுகளுக்கு உங்களுக்கு சோதனை காலமாக இருக்கும்.
குரு மற்றும் ராகு நல்ல நிலையில் இல்லாததால், உங்களுக்கு பாதுகாப்பு தரமாட்டார்கள். அதனால் நீங்கள் பிறந்த சாதகத்தையும், மகா தசை மற்றும் அந்தர தசையையும் சார்ந்தே எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டும். உங்கள் குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களுடன் எந்த விதமான சட்ட பிரச்சனைகளையும் வைத்துக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. அப்படி ஏற்பட்டால் அதற்கு தீர்வு காண பல ஆண்டுகள் ஆகலாம். திருமணம் ஆன தம்பதியினர் அன்யுனியம் குறைந்து காணப்படுவார்கள். மேலும் குழந்தை பேரு பெரும் பாக்கியமும் தற்போது சிறப்பாக இல்லை.
காதலர்கள் அடிக்கடி சண்டைகள் போடுவார்கள். காதல் முற்றிலும் உங்கள் உறவில் இல்லாமல் இருக்கும். உங்களால் உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்களிடம் இருந்து சம்மதம் வாங்க முடியாமல் போகலாம். உங்கள் குடும்பத்தில் அதிக சண்டைகள் ஏற்படக் கூடும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 அல்லது நவம்பர் மாதம் வக்கில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பிரிய நேரிடலாம்.
Prev Topic
Next Topic