2020 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

கண்ணோட்டம்


முக்கிய கிரகங்கள் உங்கள் ராசியின் 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் இணைந்து சஞ்சரிபதால், இந்த 2020ஆம் புத்தாண்டு உங்களுக்கு நலல் பலன்களோடு தொடங்கும். சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு ஜனவரி 23, 2020 அன்று பெயருவது சாதகமற்ற நிலையை காட்டுகின்றது. இதை ஜென்ம சனி என்று கூறுவார்கள், இந்த ஏழரை ஆண்டு காலத்தின் அடுத்த 2.5 ஆண்டுகள். இந்த சஞ்சாரம் உங்கள் உடல் நலத்தை பெரிதும் பாதிக்கக் கூடும். உங்கள் பெற்றோர்களின் உடல் நலம் பாதிக்கக் கூடும்.
2020 மற்றும் 2021, ஆகிய இரண்டு ஆண்டுகளும், நீங்கள் எந்த விதமான முதலீடுகளும் செய்யாமல் தவிர்க்க வேண்டும். நீங்கள் ஜனவரி 2020 முதல் நீண்ட கால சோதனை காலத்தை தொடங்க உள்ளீர்கள். ராகு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து செப்டம்பர் 2020 வரை நல்ல பலன்களைத் தருவார்.


குரு ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரையிலான காலகட்டத்தில் உங்கள் ஜென்ம ஸ்தானத்திற்கு பெயருவார். அதன் பின் நவம்பர் 20, 2020 வழக்கமான பெயர்ச்சியை செய்வார். ஏப்ரல், மே, ஜூன், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நீங்கள் அதிக கசப்பான அனுபவங்களை உங்கள் வாழ்க்கையில் சந்திக்க நேரிடும்.
குரு அல்லது சனி பகவான் அடுத்த சில ஆண்டுகளுக்கு சாதகமான நிலையில் சஞ்சரிக்காததால், நீங்கள் எந்த ஒரு முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றாலும், உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து அதன் பின்னரே செயல்பட வேண்டும். விஷ்ணு சஹாசர நாமம் மற்றும் சுதர்சன மகா மந்திரம் கேடு நேர்மறை சக்திகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் விரைவாக குணமடையவும் இது உதவும்.



Prev Topic

Next Topic