![]() | 2020 புத்தாண்டு பரிகாரம் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | பரிகாரம் |
பரிகாரம்
இந்த ஆண்டு உங்களுக்கு சற்று கடினமான ஆண்டாக இருக்கும். நீங்கள் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்தே எந்த ஒரு காரியமும் செய்ய வேண்டும். அதிக பொறுமையோடு இருந்து, உங்கள் வாழ்க்கையின் இந்த பாகத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும். உங்கள் பிறந்த சாதகத்தை பார்த்து அதற்கேற்றவாறே எந்த ஒரு முக்கிய முடிவுகளும் எடுக்க வேண்டும்.
1. அசைவ உணவை முற்றிலும் தவிர்ப்பது நல்லது
2. ஆலங்குடி கோவில் அல்லது வேறு குரு பகவான் கோவிலுக்கு சென்று வருவது நல்லது
3. தேனீ மாவட்டத்தில் இருக்கும் குச்சனூர் கோவில் அல்லது திருநள்ளாறு அல்லது வேறு சனி பகவான் கோவிலுக்கு சென்று வருவது நல்லது
4. சுதர்சன மகா மந்திரம் கேட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு பெறுங்கள்
5. வியாழன் தோறும் விஷ்ணு சஹாசர நாமம் கேளுங்கள்
6. மூச்சு பயிற்சி செய்து உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு இந்த கடுமையான காலகட்டத்தை கடக்க முயற்சி செய்யுங்கள்
7. ஏகாதசி நாட்களில் விரதம் இருக்க முயற்சி செய்யுங்கள்
8. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யுங்கள்
9. பெருமாளை வணங்கி நிதி நிலையில் வளர்ச்சியைப் பெறுங்கள்
Prev Topic
Next Topic