![]() | 2020 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | இரண்டாம் பாகம் |
மார்ச் 29, 2020 முதல் ஜூலை 01, 2020 வரை சதிகள் (35 / 100)
குரு மற்றும் சனி பகவான் இணைந்து உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கின்றனர். இது உங்களுக்கு ஒரு மோசமான காலகட்டமாக இருக்கும். உங்களுக்கு மன அழுத்தமும், பதற்றமும் அதிகமாக இருக்கும். உங்கள் நெருங்கிய உறவினர்களுடன் அதிக பிரச்சனைகள் ஏற்படக் கூடும். காதலர்கள் மற்றும் திருமணம் ஆன தம்பதியினர் அதிக சவால் நிறைந்த நேரத்தை சந்திப்பார்கள். குடும்பத்தில் அதிகரிக்கும் பிரச்சனைகளால் உங்கள் மன நிம்மதி பாதிக்கக் கூடும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் உத்தியோகம் காரணமாகவோ அல்லது பயணம் காரணமாகவோ, தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ உங்கள் குடும்பத்தினரை விட்டு பிரிய நேரிடும்.
அலுவலகத்தில் உங்களுக்கு எதிரான அரசியலும், சதிகளும் அதிகமாக இருக்கக் கூடும். உங்களுடன் வேலை பார்ப்பவர்களுடன் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்படக் கூடும். எனினும், உங்கள் முதலாளி உங்களுக்கு உதவியாக இருக்க மாட்டார். மேலும் எச் ஆர் உங்களை செயல் திறன் அதிகரிக்க சில பயிற்சிகளில் போடக் கூடும். இத்னாஹ் காலகட்டத்தில் நீங்கள் உத்தியோகத்தில் வளர்ச்சியை எதிர் பார்க்க முடியாது. நீங்கள் கவனமாக இல்லையென்றால், இந்த காலகட்டத்தில் உங்கள் வேலையை இழக்கும் சூழல் உண்டாகலாம். தொழிலதிபர்கள் எதிர்பாராத பின்னடைவுகளை சந்திக்கக் கூடும். நீங்கள் கவனமாக இல்லையென்றால், உங்கள் செல்வாக்கு பாதிக்கக் கூடும்.
உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்காது. எதிர்பாராத பயணம் மற்றும் மருத்துவ செலவுகள் அதிகமாக இருக்கும். மேலும் பண விடையங்களில் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் உங்களை ஏமாற்றக் கூடும். நீங்கள் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு உதவி செய்ய பணம் கொடுத்தாலும், அது தவறான நபரிடம் செல்லக் கூடும். பங்கு சந்தை முதலீடுகள் உங்களுக்கு அதிக நட்டத்தை ஏற்படுத்தக் கூடும். உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல், ரியல் எஸ்டேட் முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லதது.
Prev Topic
Next Topic