![]() | 2020 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | மூன்றாம் பாகம் |
ஜூலை 01, 2020 முதல் நவம்பர் 20, 2020 வரை மன அழுத்தம் மற்றும் பதற்றம் (45 / 100)
குரு பகவான் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிற்கு மீண்டும் பெயருகிறார். இதனால் உங்கள் பிரச்சனைகளின் தாக்கம் குறையும். குரு பகவான் செப்டம்பர் 13, 2020 அன்று வக்கிர நிவர்த்தி அடைகிறார். எனினும் ராகு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் செப்டம்பர் 2020 முதல் சஞ்சரித்தும், சனி பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரித்தும் தொடர்ந்து உங்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்குவார்கள்.
உங்கள் பதற்றம் மற்றும் மனக் கவலை அதிகமாக இருக்கும். மன அழுத்தம் அதிகமாக இருக்கும். உணல் மனதில் தேவையற்ற பயமும், பதற்றமும் நிறைந்திருக்கும். நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு இந்த சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும்.
காதலர்களுக்கும், திருமணம் ஆன தம்பதியினருக்கும் இந்த காலகட்டத்தில் அதிக பிரச்சனைகள் ஏற்படக் கூடும். குழந்தை பேருக்கு திட்டமிட இது ஏற்ற நேரம் இல்லை. மேலும் IVF மற்றும் IUI போன்ற மருத்துவ சிகிச்சைகளும் உங்களுக்கு ஏமாற்றத்தை தரக் கூடும். இந்த காலகட்டத்தில் உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல் புதிய உறவை தொடங்குவதையோ அல்லது திருமண முயற்சிகளை எடுப்பதையோ தவிர்ப்பது நல்லது. உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது ஏற்ற நேரம் இல்லை.
நீங்கள் 24/7 வேலை பார்த்தலும், உங்கள் மேலாளரை மகிழ்ச்சி அடைய செய்ய முடியாது. உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் உங்கள் வேலையை இழக்கும் சூழலும் ஏற்படக் கூடும். உங்கள் பதவி உயர்வு குறித்த விடயக்னால் தாமதமாகும். நீங்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு தற்போது நடக்காமல் போகலாம். புது வேலை வாய்ப்பிற்கு முயர்சி செய்ய இது நல்ல நேரம் இல்லை. தொழிலதிபர்கள் அதிக சவால்களை சந்திக்க நேரிடும். தொழிலதிபர்களுக்கு சட்ட பிரச்சனைகளும், வருமான வரி பிரச்சனைகளும் ஏற்படக் கூடும். சுய தொழில் புரிவோர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள் தங்களுக்கு எதிராக நடக்கும் அரசியலால் தங்கள் கமிசனை இழக்க நேரிடும்.
இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலை மோசமாக பாதிக்கக் கூடும் .பங்கு சந்தை வர்த்தகத்தை விட்டு முற்றிலும் விலகி இருப்பது நல்லது. உங்கள் நேரம் தற்போது மோசமாக இருப்பதால், உங்களால் சரியான முடிவுகள் எடுக்க முடியாமல் போகலாம். இதனால் தற்போது உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கக் கூடும். ஒரு நல்ல ஆலோசகரின் ஆலோசனை பெற்று இந்த கடுமையான காலகட்டத்தை கடக்க முயற்சி செய்யுங்கள்.
Prev Topic
Next Topic