2020 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடுகள்


ஏழரை சனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பங்கு சந்தை முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. மாறாக, பாதுகாப்பான முதலீடுகளான, வங்கியில் சேமிப்பு, நிரந்தர வைப்பு நிதி, அரசு பத்திரம், காப்பீடு போன்றவைகளை செய்ய முயற்சிக்கலாம். ஸ்பெகிலேடிவ் வர்த்தகம் உங்களுக்கு பெரும் அளவு நிதி இழப்பை ஏற்படுத்தக் கூடும். அப்படி நட்டம் ஏற்பட்டால், அதில் இருந்து மீள உங்களுக்கு பல ஆண்டுகள் ஆகலாம்.
ஜனவரி 2020 முதல் செப்டம்பர் 2020 வரையிலான காலகட்டத்தில், உங்களுக்கு மிக குறைந்த விலைக்கு நிலம்/ வீடு கிடைத்தாலும், எந்த விதமான ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. அப்படி நீங்கள் செய்தால், நீங்கள் ஏமாற்றப்படலாம், அலல்து உங்கள் நிலத்தை பிறர் தவறாக பயன்படுத்தி உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். புதிதாக கட்டிடம் கட்ட வேண்டும் என்றாலோ அல்லது சொத்துக்கள் வாங்க வேண்டும் என்றாலோ, அதற்கு உங்கள் பிறந்த சாதகத்தின் பலன் இருக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் அணுகும் கட்டுமான நிறுவனம் அல்லது நிபுணர் உங்கள் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விடக் கூடும். அதிர்ஷ்ட சீட்டு மற்றும் சூதாட்டம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. அது உங்களை அடிமையாக்கக் கூடும் மேலும் நீங்கள் பணத்தையும் அதில் இழக்க கூடும்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic