![]() | 2020 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
இந்த 2020ஆம் ஆண்டு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு கடுமையான ஆண்டாக இருக்கும். உங்கள் ஜென்ம ராசியில் சனி பெயர்ச்சி நடைபெறுவதால், உங்கள் உத்தியோகத்தில் வளர்ச்சி மெதுவாகவே இருக்கும். உங்களுக்கு அலுவலகத்தில் அதிக அழுத்தமும் பதற்றமும் ஏற்படக் கூடும். உங்கள் உடல் அலுவலக பணிகளை செய்ய ஒத்துழைக்காது. நீங்கள் உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடித்து விட்டாலும், அதற்கு உங்கள் மேலாளர் மகிழ்ச்சி அடைய மாட்டார். உங்களுடன் வேலை பார்ப்பவர்களுடனும், மேலாளருடனும் அதிக உராய்வுகள் ஏற்படக் கூடும்.
உங்கள் மறைமுக எதிரிகள் பலம் பெறுவார்கள். மேலும் அவர்கள் உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் உங்களுக்கு எதிரான சதிகளை செய்வார்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்களுக்கு ஏப்ரல் / மே 2020 வாக்கில் செயல் திறன் குறைவால் எச் ஆரிடம் இருந்து நோட்டிஸ் வரக் கூடும். உங்களால் உங்களைவிட தகுதி குறைவானவருக்கு கீழ் வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள். இது உங்களுக்கு அதிக மன உளைச்சலை தரக் கூடும். ராஜினாமா தருவது அல்லது உங்கள் முதல்லையை பற்றியும், உடன் வேலை பார்ப்பவர்களை பற்றியும் புகார் கூறுவது என்று எந்த ஒரு அவசர முடிவுகளையும் எடுக்காமல் இருப்பது நல்லது. இது உங்கள் நிலையை மேலும் மோசமாக செய்து விடும்.
இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் வாழ்வாதாரதிற்காக உங்கள் உத்தியோகத்தை பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். மாறாக வளர்ச்சியை எதிர்பார்க்க இது ஏற்ற நேரம் இல்லை. நீங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை பெரும் அளவு குறைத்துக் கொள்ள வேண்டும். உங்களால் தற்போது இருக்கும் நிலையில் உங்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றாலே, அதுவே உங்களுக்கு ஒரு பெரிய சாதனை தான். நீங்கள் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தால், உங்களுக்கு விசா பிரச்சனைகள் அலல்து குடியேற்ற பிரச்சனைகள் மே 2020 வாக்கில் ஏற்படக் கூடும்.
Prev Topic
Next Topic