2020 புத்தாண்டு தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி)

தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்


குரு தனுசு ராசிக்கு பெயருவதாலும், உங்கள் ஜென்ம ராசியை பார்வை இடுவதாலும், இந்த 2020ஆம் ஆண்டு உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்,. உங்கள் நிதி பிரச்சனைகளில் இருந்து வெளி வந்து விடுவீர்கள். மேலும் புது முதலீட்டாளர்கள் மூலமாக அல்லது வங்கி கடன் மூலமாக உங்களுக்கு நிதி கிடைக்கும். நிதி மறுபரிசீலனை செய்வதில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் நிர்வாக செலவுகள் குறையும். உங்களுக்கு நல்ல ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். இதனால் உங்கள் பண வரவு அதிகரிக்கும்.
குரு நல்ல நிலையில் சஞ்சரித்தாலும், முக்கிய கிரகங்களான, சனி பகவான், கேது மற்றும் ராகு நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை. எனினும், நீங்கள் உங்கள் லாபத்தை ஒரு நல்ல நிலையில் தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்வீர்கள். மேலும் உங்களுக்கு குரிப்பிடத்தக்க வளர்ச்சி உங்கள் தொழிலில் ஏற்பட வேண்டும் என்றால், அதற்கு உங்கள பிறந்த சாதக பலனும், மகா தசையும் உங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும்.


உங்களுக்கு ஜனவரி 23, 2020 அன்று அஷ்டம சனி தொடங்க உள்ளதால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்கள் குடும்பத்தினரின் பெயரை தொழிலில் சேர்த்துக் கொள்வது நல்லது. இல்லையென்றால், நீங்கள் தொழிலில் நட்டத்தை காண நேரிடலாம். குரு நவம்பர் 2020 வரை நல்ல நிலையில் சஞ்சரிப்பாதால், அது வரை உங்களுக்கு பெரிதாக எந்த பிரச்சனைகளும் இருக்காது. எனினும், 2021ல் உங்கள் நேரம் சற்று மோசமாக இருக்கும். அதனால், செப்டம்பர் அல்லது அக்டோபர் 2020 க்குள் உங்கள் தொழிலை விட்டு வெளி ஏறி விடுவது நல்லது. சுய தொழில் புரிவோர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் கமிசன் ஏஜெண்டுகள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.



Prev Topic

Next Topic