![]() | 2020 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் குடும்பத்தில் நல்ல சூழலை உண்டாக்கி தருவார். கடந்த ஆண்டு உங்கள் உறவுகளுடன் ஏற்பட்ட பின்னடைவுகள் தற்போது நல்ல தீர்வைப் பெரும். நீங்கள் உத்தியோகம் போன்ற காரணங்களால் உங்கள் மனைவி/கணவனை விட்டு பிரிந்து இருந்தால், தற்போது அவருடன் சேர்ந்து வாழ நல்ல வாய்ப்பு உண்டாகும். உங்கள் மனைவி /கணவன் மற்றும் குடும்பத்தினர்களுடன் இருக்கும் பிரச்சனைகளை மனம் விட்டு பேசி ஒரு நல்ல முடிவுக்கு வரலாம். இதனால் உங்கள் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். குடும்பத்தினர்கள் மீண்டும் ஒன்று சேருவதாலும், அனைவரும் ஒன்று கூடுவதாலும், நல்ல மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து நல்ல மதிப்பை பெறுவீர்கள்.
எனினும், இந்த குரு பெயர்ச்சி நிகழும் அனேக காலத்தில், சனி பகவான் சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால், பதற்றம் தொடர்ந்து நிலவும். உங்கள் 8ஆம் வீடு பாதிக்கப்படுவதால், எந்த முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றாலும், உங்கள் பிறந்த சாதகத்தை பார்த்து, அதன் பின்னர் செயல்படுவது நல்லது. வரும் நாட்களில் உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். உங்கள் மகன் அல்லது மகளுக்கு நல்ல வரனை கண்டறிவீர்கள். உங்களால் திருமணம், நிச்சயம், புது வீடு புகு விழா போன்ற சுபகாரியங்களை நிகழ்த்த முடியும்.
எனினும், சனி பகவான் உங்களுக்கு சில தடைகளை உண்டாக்கக் கூடும். அதனால், நீங்கள் சுப காரியம் நடக்கும் போது ஏற்படக் கூடிய சில பிரச்சனைகளை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும். குருவின் பலத்தால், இறுதி நேரத்தில் அனைத்தும் நல்லபடியாக நடக்கும். எனினும், குருவால் சுமூகமான அதிர்ஷ்டத்தை உங்களுக்கு தரமுடியாமல் போகலாம். இதற்கு முக்கிய காரணம், குரு பகவான் உங்களுக்கு நல்ல பலனைத் தர, சனி பகவானை எதிர்த்து போராட வேண்டும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரையிலான காலகட்டத்தில் அதிக பிரச்சனைகள் ஏற்படக் கூடும். குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கு நவம்பர் 20, 2020 அன்று பெயர்ந்த பின் உங்களுக்கு சோதனை காலம் தொடங்கும்.
Prev Topic
Next Topic