2020 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி)

நிதி / பணம்


குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் கடன்களை இந்த 2020ஆம் ஆண்டு விரைவாக அடைத்து விட உதவுவார். பண வரத்து பல வழிகளில் இருந்தும் வரும். உங்கள் கடனை நிதி மறுபரிசீலனை செய்யவும், விரைவாக வங்கியிடமோ அல்லது உங்களுக்கு கடன் கொடுத்த தனியார் நிறுவனத்திடமும் பேசி விரைவாக அடைத்து விட முயற்சி செய்ய இது நல்ல நேரம். உங்கள் நிதி தேவைகள் குறைவதால், உங்களுக்கு நிதி நிலையில் குறிப்பிடத்தக்க நிவாரணம் கிடைக்கும்.
சனி பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் ஜனவரி 23, 2020 முதல் சஞ்சரிப்பதால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், சனி பகவான் உங்களுக்கு அதிக செலவுகளை உண்டாக்கி, உங்கள் குரு பகவான் தருகின்ற நேர்மாரை சக்திகளை குறைத்து விடக் கூடும், புது வீடு வாங்க வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதகத்தின் பலன் பலமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், நீங்கள் அதிக விலை கொடுத்த வாங்க வேண்டிய சூழல் உண்டாகலாம். இதனால் வரும் ஆண்டுகளில், 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில், நீங்கள் கடன் பிரச்சனைகளில் சிக்கவும் நேரிடலாம்.


உங்கள் நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்கள் என்று யாராக இருந்தலும், ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரையிலான காலகட்டத்தில் யாருக்கும் பணம் கடன் கொடுப்பதையோ, யாரிடம் இருந்தும் கடன் வாங்குவதையோ தவிர்ப்பது நல்லது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பணம் குறித்த பிரச்சனைகள் ஏற்படக் கூடும். குறிப்பாக அவசர தேவைகளுக்காக பணத் தேவைகள் ஏற்படக் கூடும். ஜூலை 2020 முதல் அக்டோபர் 2020 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு நிதி நிலையில் ஒரு சுமூகமான சூழல் ஏற்படும். இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டு நீங்கள் அடுத்த 2021ஆம் ஆண்டு உங்கள் ஒரு நல்ல நிதி நிலையில் செட்டில் ஆகி விட முயற்சி செய்யுங்கள்.



Prev Topic

Next Topic